பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.சிவகங்கைச்சீமையிலே! சிவகங்கைச் சீமையிலே மருது பாண்டியருக்கு அளவில்லாத செல்வாக்கு இருந்தது. அவர்கள் கிழித்த கோட்டை எந்த மறவனும் ாண்டான். அவர்கள் ஆணைக்கு ஆயிரக்கணக்கான மறவர் ஆர்வத்தோடு ாத்திருப்பர் விழு நெருப்பில் என்றால், மகிழ்ச்சியோடு விழுந்து சாவர் லர். அத்தகைய அன்பு படைத்த மக்களையும் மறவர் சேனையையும் அவ்வீரர்கள் பெற்றிருந்தார்கள். ஆரம்பத்தில் சிவகங்கை மன்னரது படையைச் சார்ந்த போர் வீரர்களாகவே பெரிய மருதுவும் சின்ன மருதுவும் நமக்குக் காட்சி அளிக்கிறார்கள். ஆயினும், தங்கள் நெஞ்சுரத்தாலும், நேர்மைப் பண்பாலும், நுட்ப மதியாலும், நன்றி உணர்ச்சியாலும் இவ்வுடன் பிறப்பாளர் இருவரும் நாளடைவில் இணையில்லா அரசியல் செல்வாக்குப் பெற்று விட்டனர்; நாடாளும் மன்னனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை நாளுக்கு நாள் மிகுதியாக்கிக் கொண்டு, அரசனையும் விஞ்சிய புகழ்ச் செல்வர்களாய் விளங்கினார்கள். இறுதியில் தள்ளாத வயதினனாய் இருந்த முத்து வடுகநாதன் எதற்கும் மருது பாண்டியர்களையே நம்பி வாழும் நிலை ஏற்பட்டது. மருது பாண்டியரும் இந்த நம்பிக்கைக்கு அணுவளவும் மாறின்றி அரசரும் குடிமக்களும் ஒருங்கே புகழும்படி நாட்டாட்சியில் அறிவுரை கூறும் அமைச்சர்களாயும், நாட்டு மக்களைப் போர்ப்பயிற்சியில் தலை சிறந்தவர்களாக்கப் பாடுபடும் சிறந்த தளபதிகளாயும் விளங்கினர். தங்கள் நாட்டில் இருந்த மறவர், அகம்படையர், சேர்வைகள், முதலிமார், பிள்ளைமார், இராசாக்கள், நாயுடுகள் அனைவரையும் கூட்டிப் போர்ப்பயிற்சி தந்தார்கள் மருது பாண்டியர்கள். அவர்களுடன் எப்போதும் இருபதாயிரம் வீரர் எதற்கும் தயாராய் இருந்தனர். இந்திலையிலேதான் சிவகங்கைச்சீமைக்குச் சோதனை நிறைந்த காலம் தொடங்கிற்று. நாம் சிவகங்கைச் சீமையைப் பற்றியும், அதை ஆண்ட முத்து வடுகநாதப் பெரிய உடையணத் தேவனைப் பற்றியும், யூனியன் ஜாக்கின் நிழலில் நின்று கொண்டு ஆர்க்காட்டு நவாபு செய்து வந்த தர்பாரையும் அவன் புரிந்த அநீதிகளையும் பொறுக்க முடியாமல் வீர மறவர்கள் நெஞ்சம்

سة