பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 36 நடக்கட்டும் என்றான் முத்து வடுகநாதன். அரசி வேலு நாச்சியும் கொடி பிடித்துக் குதிரைமீதேறி முன்னின்று, உம்ம்..... சாடுங்கள் சிதையுங்கள் பகைவரை என்றாள். அவ்வீர மங்கை பற்றிய கைவாள் கணக்கற்ற ஏகாதிபத்திய வெறியர்களுடைய தலைகளை வெட்டிக் குவித்தது. கண்டனர் இக்காட்சியை வீரமறவர் அவர்கள் குருதி கொப்பளித்தது. அவர்கள் மாற்றார் படையைச் சின்னபின்ன மாக்கினார்கள். இந்நிலையில் மருது சகோதரர்கள் தங்கள் கை வாளாலும், வளரித் தடியாலும், கதையாலும் மாற்றார் படை வீரர்களைப் பிண மலைகளாக்கிக் குவித்தார்கள். ஆயினும், துரோகிகள் சதி, புதுக்கோட்டையான் படை, நவாபுவின் சேனை, ஆயுத பலம் நிறைந்த கம்பெனிப் பட்டாளம் - இவை அனைத்தும் சேர்ந்து தாக்கும்போது கோட்டையின் கதி என்னாகும் மதில்கள் இடிந்தன. கோட்டை வாயில் பகைவர் வயமாயிற்று நிலைமையறிந்த சின்னமருது, முத்து வடுகநாதன் காதோடு காது வைத்துப் பேசினான்; அரசரே! கிளம்புங்கள் ஏற்பாடுகள் தயார் தப்பிச் செல்வோம் படை திரட்டிப் பின்னர்த் தாக்குவோம்' என்றான். முத்துவடுகநாதன், முடியாது ஒரு நாளும் முடியாது நீங்களும் அரசியும் எப்படியாவது தப்பிச் செல்லுங்கள். நான் என் நாட்டை விட்டு வெளியேறேன். கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை மாற்றானது மார்பை, மண்டையைப் பிளந்து போராடுவேன்! வெற்றி அல்லது வீரச்சாவு அடைவேன் என் உடல் சிந்தும் ஒவ்வொரு துளிக் குருதியிலிருந்தும் ஒரு விடுதலை வீரன் கிளம்புவான். எனவே, கவலை வேண்டா. புறப்படுங்கள் அரசியைக் காப்பாற்றுங்கள்' என்றான். இதற்குள் தலை சிறந்த அத்தமிழ் வீரனை நாற்புறமும் பகைவர் படைவளைத்துக் கொண்டது. ‘என்னைக் கைது செய்ய எமனாலும் இயலாது என்று எட்டிப் பிடிக்க வந்த பகைவரை வெட்டி வீழ்த்தினான் முத்து வடுகநாதன், கையில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் பயன் படுத்திப் பகைவர் படையைக் கூறு கூறாக்கினான் கருவிகள் யாவும் தீர்ந்த பின்னரும் கடுகி வந்த பகைவரைக் கையாலேயே குத்தினான். வாளாலும் ஈட்டியாலும் வீரம் மிக்க கைகளாலும் வந்தவரை எல்லாம் எதிர்த்து, விண்ணுக்கு அனுப்பிய அவ்வீரமகனுடைய திருக்கரங்களை வெட்டித் தள்ளினார்கள் ஏகாதிபத்திய வெறியர்கள். 'கை போனால் என்ன என்று பாய்ந்து வந்த பகைவரைக் கால்களால் எட்டி உதைத்தான் முத்து வடுகநாதன். கால்களும் துண்டிக்கப்பட்டன. அவன் களைத்தானில்லை. அடக்க வந்தவர்களைப் பற்களாற்கடித்து அலற வைத்தான். அவன் திருமுகத்தைத் தாக்கினர் கயவர். அப்போதும் அவ்வீரன் காறி உமிழ்ந்தான் வெறியர் கூட்டத்தைப் பார்த்து. இறுதியில் ஒரு குண்டுக்குத் தமிழகத்தின் விடுதலைக்காக இறுதி வரையிற் போராடிய வீர முத்து வடுகநாதன் பலியானான் வீரருள் வீரனாய் வாழ்ந்த அத்தமிழ் மகனை நாம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றுவோமாக!