பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானங்காத்த மருது.ாண்டியர் 42 இவ்வாறு தமிழகத்தின் விடுதலை வீரர்கள் பொதுவாகச் சிவகங்கைச் சீமை முழுவதிலும் சிறப்பாகக் கமுதியிலும் நிறைந்துள்ளதை அறிந்த கம்பெனிப்பட்டாளம், 1801 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் கமுதிக்குள் நுழைந்தது. எதிர் பார்த்த வண்ணம் வீர மறவர்கள் கம்பெனிப் பட்டாளத்தை வாள்கொண்டு வரவேற்றார்கள். மூண்டது போர் இரு தரப்பிலும் நல்ல சண்டை வெட்டு, குத்து, நாசம் கமுதியில் தொடங்கிய போர் 45 மைல் தொலைவில் உள்ள நாகலச் சேரியிலிருந்து திருப்பூவனத்திற்கு மாறியது. இங்கு நடந்த போரில் கம்பெனி வீரர் பலர் பலியிடப்பட்டனர். இதற்குப் பின் எட்டரை மைல் தொலைவில் உள்ள திருப்பாச்சேத்தி என்ற இடத்தில் நடந்த போரில் விடுதலைவீரர்கள் தங்கள் வஞ்சம் தீரக் கம்பெனிப் பட்டாளத்தைக் கொன்று குவித்தார்கள். அன்றைக்கு நடந்த போரில் மட்டும் மேஜர் கிரே என்ற தளபதியும், 16 பேரும் எமனுலகம் சென்றனர் என்றும், லெப்டினன்டுகளான பிளாக்கர், கோல், பர்மின்டர், ஸ்டுவர்ட்டு என்ற நான்கு படைத் தளபதிகளும் முப்பத்தைந்து பேரும் படுகாயப்படுத்தப்பட்டனர் என்றும் வெள்ளைத் தளபதி வெல்ஷ் எழுதி வைத்துள்ள நாட்குறிப்புக் கூறுகிறது. இதை அடுத்து ஜூன் மாதம் 10 ஆம் ாள் நடந்த வீரப்போரில் 3000 க்கு மேற்பட்ட விடுதலை வீரர் கலந்து ாண்டனர். அன்றைய போரில் முதலில் பத்து ஐரோப்பியர்களும் ாண்பத்தாறு சுதேசிக் கூலிப்படை வீரர்களும் சிவகங்கை மறவர்களின் குருதி தோய்ந்த வாளுக்கு இரையானார்கள். இந்தப் பரிசுகளை மறவர் சேனையிடமிருந்து வேதனையுடன் பெற்றுக் கொண்ட கம்பெனிப் பட்டாளம், அடுத்துப் பார்த்திபனூரில் ஓரிரவு முகாம் அடித்தது. அன்று முழுதும் அவர்கள் உறங்கவில்லையாம். அன்றைய தினம் நள்ளிரவு கழிய, விடியற்காலம் மணி நான்கானதும் பெற்ற மன அமைதியை அம்முகாமில் இருந்த கர்னல் வெல்ஷ் அதற்கு முன் எப்போதுமே கண்டது இல்லை என்று எழுதி வைத்துள்ளான். என்னே கம்பெனிப் பட்டாளத்திற்கு இருந்த குலை நடுக்கம்! {{ § 3* ఢ

§o பொழுது புலர்ந்தது. கம்பெனிப் பட்டாளம் தலை தப்பியது போதும்! என நினைத்து, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் ஓடோடியும் போய்ச் சேர்ந்தது. இடைவழியில் ஊமைத்துரை வீரர்களும் மருது பாண்டியருடைய மறவர்களும் கம்பெனிப்பட்டாளத்திற்குத் தரவேண்டிய காணிக்கைகளைத் தரத் தவறவில்லை. எப்படியோ, அடிபட்டாலும் உதைபட்டாலும், உயிரோடு பிழைத்தோம் என்று இராமநாதபுரம் சேர்ந்த கம்பெனிப் பட்டாளம் ஆறு நாள்கள் நிம்மதியாய்த் தங்கி, ஒய்வு கொண்டு, தின்றும் குடித்தும் திரிந்ததாம். இந்த ஆறு நாள் ஒய்விற்குப் பின் மீண்டும் கம்பெனிப் பட்டாளத்திற்குக் கடுமையான வேலை தரக் காத்திருந்தது மருது பாண்டியர் டர்லிட.