பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 44 கோலம் கொடுமை கம்பெனிப்படை முகாம் அடித்திருந்த இடத்திலிருந்தே மூன்றே மைல் தொலைவில் இருந்து சிறுவயல் நகரத்தைப் பிடிக்கக் கம்பெனிப்படைகள் பட்ட பாடு கொஞ்சம் அன்று ஆறு மணி நேரம் மிகக் கடுமையான போர் நடந்தது. அங்குலம் அங்குலமாகவே கம்பெனிப் பட்டாளம் வீர மறவர்களை எதிர்த்து முன்னேற வேண்டியிருந்தது. அவ்வாறு முன்னேறியும், தீயில் வேகும் நகருக்குள்ளேதான் நுழைந்தது ஏகாதிபத்தியப் படை. இதற்குப்பின் மருது பாண்டியரின் வீரப்போர். புதியதொரு திருப்பத்தை அடைந்தது. சிறு வயலுக்குத் தென்மேற்கில் 7 அல்லது 8 மைல் தொலைவில் உள்ளது காளையார் கோவில். மருது பாண்டியர் நாளில் இந்தப் பகுதி முழுதும் அடர்ந்த காடாய் இருந்தது. சிறுவயல் நகரத்தைத் தீக்கு இரையாக்கிவிட்டு வெளியேறிய வீரமறவர் சேனை, சிறுவயல் காட்டுக்குள்ளே சென்று, காளையார் கோவில் நோக்கிப் பறந்தது. ஆனால், மலை போல உயர்ந்து, பச்சைப்பசேலெனப் பயங்கரமாய் நிற்கும் அக்காட்டுள்நுழைந்து அவர்களை வெற்றி கொள்வது கம்பெனிப் படைகளுக்கு எளிதில் கைகூடுமோ? எனவே, சிறுவயல் காட்டையே அழித்துக் காளையார் கோவிலை அடைய நீண்டதொரு பாதை இடும் வேலையில் முனைந்தனர் கம்பெனிப்படையினர். இந்த வேலையில் முன் நின்றவர்கள் புதுக்கோட்டைத் தொண்டைமான் அனுப்பி வைத்த இரண்டாயிரம் கூலிப்படை வீரர்கள். இவர்களைப் பாதுகாக்க இருநூறு வெள்ளையரும், மலேயா நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சிப்பாய்களும் துப்பாக்கியும் கையுமாய் நின்றார்கள். 32 நாள்கள் பாடுபட்டுக் காட்டை அழித்துப் பாதை போடும் பெரிய வேலையில் கம்பெனித் துருப்புகள் காலத்தைக் கழித்தன. ஜூலை மாதம் 31 ஆம் நாள் தொடங்கப்பட்ட இவ்வேலை, செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள் கைவிடப்பட்டது. காட்டை அழிக்கும் கடின வேலையில் ஈடுபட்ட கம்பெனிப் படைகள் அனைத்தும், உள்ளமெலாம் உடைந்து, மெய்யெலாம் சோர்ந்து, பழைய ஒக்கூர்க் கிராமத்திற்கே ஒடி வந்தன. இந்த 32 நாள்களில் காட்டுக்குள் சிக்கிக் கொண்ட கம்பெனிப்படைகளைக் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மருது பாண்டியர்களது படை கண்டதுண்டமாக்கியது. பல முறை கம்பெனிப் படைகள் கூண்டோடு கைலாசம் போக வேண்டிய நிலையிலிருந்து உயிர் தப்பின. காட்டை அழிக்கும் முயற்சியிலும் கம்பெனிப் படைகள் சுலபமாக வெற்றி பெற இயலவில்லை. வெட்ட வெட்டக் காடு அடர்த்தியாகவும் கடினமாகவும் இருப்பது கண்டு, வெள்ளைப்படை வெருண்டு நின்றது. இடையிடையே கடுமழையில் கம்பெனிப் பட்டாளம் அடைந்த துன்பம் சொல்லொணாதது. இயற்கையுங் கூட, இந்தப் பேரரசு வெறியர்களை எதிர்த்துப் போராடியது. கம்பெனிப்படைகளுக்கு மிகுந்த பாதகமாக அடர்ந்த காடும் பலமான