பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பேராசிரியர் ந.சஞ்சீவி கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். இவ்வாறு பகைவர் பார்வைக்குப் புலப்படாதவாறு தன்னைப் பச்சைப் பசும்புதர்களிலும் காடுகளிலும் மறைத்துக் கொண்டே மருது பாண்டியரின் படை குரங்குப் போர்' நடத்தியது. ஆனால், ஏதுமே நேராது என்று கனவு காணும் வெள்ளையரது ஏகாதிபத்தியக் கும்பல்மேல், திடீரெனக் கவண் கற்களின் மழை பொழியும், தலை துக்க முடியாது. ஒரு கணம் எங்கும் அமைதி நிலவும். எங்கிருந்தோ மீண்டும் குண்டுகள் பாயும். சிப்பாய்கள் புழுப்போலச் சுருள்வார்கள்; குண்டுக்கு அஞ்சிக் கூடாரத்திற்குள் நுழைவார்கள். தொப்புத் தொப்பென்று கூடாரத்தின் மீது தீப்பந்தங்கள் விழும். ஐயோ! நெருப்பு என்ற அலறல் காட்டைக் கலக்கும். எதிரே இருப்பவர் யாரெனத் தெரியாதவாறு காரிருள் கவிந்திருக்கும். மின்னல் வீச்சுப் போலச் சுருள் கத்திகள் சுழலும், கண்ணிமைப்பதற்குள் கணக்கற்ற தலைகள் - கூலிச்சிப்பாய்கள், கம்பெனி வீரர்கள் தலைகள் - பனங்காய்கள் போல உதிரும். பொழுது விடிந்து பார்த்தால், வீர மறவர்கள் இரவு நிகழ்ந்த போரில் இறந்து போன வீரர்களுடைய பிணங்களை இழுத்துச் சென்ற அறிகுறிகள், பரந்து கிடக்கும் குருதிக் கறையால் தென்படும். விடுதலை வீரர்கள் மிக நெருங்கிச் சுடப்பட்டால் ஒழிய, போர்க்களத்தில் மடிந்த வீரர்களை நம் புரட்சி வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து செல்லத் தவறியதில்லை. இதைக் கர்னல் வெல்ஷ் வியப்போடு கூறுகிறான். இவ்வாறு நடுக்காட்டில் சிக்கித் தவித்து மாண்டு மறைந்த கம்பெனிப் பட்டாளத்தின் துயரக் குரலே எதிரொலிப்பதுபோல வெல்ஷ் துரை எழுதி வைத்திருக்கும் எண்ணங்களைப் பாருங்கள்: 'இன்று ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாள், காளையார் கோவிலுக்குச் சிறுவயலிலிருந்து பாதை போடும் முயற்சியைக் கைவிட்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடுவது என்ற முடிவிற்கு வந்தோம். இந்த முடிவைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில், பெரும்பாலார்க்குச் சுடுகாடாயமைந்த இடத்தைவிட்டுக் கிளம்பிடுவது எங்கள் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி தந்தது அம்மகிழ்ச்சியில் ஒரு மாத காலம் நாங்கள் அரும்பாடு பட்டுச் செய்த வேலையைக் கை விடுவதால் ஏற்பட்ட அவமானத்தைக் கூட மறந்துவிட்டோம். எங்கள் பாசறை முழுவதும் வயிற்றுப்போக்காலும் குருதிப் போக்காலும் அல்லற்படும் நோயாளிகள் நிறைந்த கூட்டமாகிவிட்டது. உண்மையில் அக்கொடிய நோய்க்கு இரையாகி மடிந்த அதிகாரிகளும் வீரர்களும் எண்ணற்றவர்கள். உடல் நலத்துடன் எஞ்சி இருந்தவர்களும் கண்ணெதிரில் பச்சைப்பசேலென மலை போல எழுந்து நின்று உட்புக முடியாதவாறு தடுக்கும் அடர்ந்த காட்டின் நடுவில் செயலற்றுக் கிடப்பதால் உள்ளம் குன்றி, மனநோய் பிடித்துக் கிடந்தார்கள். எங்கள் எதிரிகளோ, நாங்கள் மணிக்கொரு முறை தாக்கியும்,