பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 48 எவ்வாறோ மாயமாய் மறைந்து, ஆனால் எங்களைச் சுற்றிச் சுற்றி வளைத்த வண்ணம் இருந்தார்கள். ஒரு மாத காலமாக நாங்கள் பாளையங் கோட்டைக்கு ஒரு கடிதங் கூட அனுப்ப முடியவில்லை. அவர்களுடைய எச்சரிக்கையான கண்காணிப்பினின்றும் தப்பிச் செல்ல எவ்வளவோ முயன்றும் பயன் இல்லை. அப்பகுதியின் ஒவ்வோர் அங்குலத்தையும் அங்கு வாழும் மக்களையும் நன்கறிந்து பணி செய்ய வலிய வந்த பாளையக்காரன் ஒருவனிடம் நானே ஐந்து வராகனையும் ஒரு சிறு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினேன். கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் இன்னோர் ஐந்து வராகனை அவனுக்குத் தருவது என்பது ஏற்பாடு. ஆனால், பின்னர் நான் அறிந்து கொண்ட வகையில் அவன் எவ்வளவோ எச்சரிக்கையாக இரவு நேரம் பார்த்துப் புறப்பட்டுப் போன போதிலும், எங்கள் முகாமிலிருந்து சில மைல் கடப்பதற்கு முன்பே அவன் எங்கள் பகைவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.' இத்தகைய பயங்கரச் சூழ்நிலையில் 32 நாள்கள் அவதிப்பட்டுக் கம்பெனிப் பட்டாளம் குற்றுயிராய்க் கிடந்த நிலையில், அதற்குப் புத்துயிர் அளிப்பது போல இன்னொரு பட்டாளம் பிரான்மலைப் பக்கமிருந்து பேய்த் தனமாகத் தாக்கிக் கொண்டே முன்னேறி வந்தது. சாகக் கிடந்த கம்பெனிப்பட்டாளத்திற்கு இப்பேருதவி கிடைத்ததும் அது சும்மா இருக்குமா? அப்பட்டாளம் வெறி பிடித்து எழுந்தது; பல நாள் பாடு பட்டுத் தான் கட்டி வைத்த முகாம்கள் முதலியனவற்றைத் தீக்கு இரையாக்கிய பின் காட்டை விட்டு வெளியேறித் தப்பினோம் என வந்து சேர்ந்தது.