பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பேராசிரியர் ந.சஞ்சீவி 1801 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 12 ஆம் நாள் கர்னல் அக்நியூ துரை முன்னிலையில் அக்கினி சாட்சியாக, ஐந்து பூதங்கள் சாட்சியாக, சோழபுரம் கோவிற் கட்டடம் சாட்சியாக, உடையணத்தேவன், மறவர் சீமையின் பொம்மை ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். இந்த விந்தை மனிதனைப் பற்றிக் கர்னல் வெல்ஷ் என்னும் வெள்ளைத் தளகர்த்தனே நேரில் பார்த்து எழுதும் வரிகளைப் படிக்கும் போது நம்மை அறியாமல் நம் வாய் சிரிக்கும் இதோ படித்துப் பாருங்கள் அவ்வெள்ளையன் கூறுவதை: ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி: இன்று மாலை மறவர் நாட்டின் புதிய ராஜா உடையணத்தேவன் தன் அண்ணனோடும் வயதான ஒரு பிராமணனோடும் கர்னல் அக்நியூ துரையை முதன்முதலாகக் கான வந்தான். அவன் பார்வைக்குப் பெரிய சாது போலத் தோன்றினான். ஆனால், சந்தர்ப்பமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் திடீரென எதிர்பாராத விதமான அவனை உயர்த்திவிட்டன. அரச பதவியின் பெருமிதத்திற்கும் கம்பீரத்திற்கும் அவன் மிகவும் புதியவன். ஆகையால், மிகுந்த கூச்சமும் கலக்கமும் உடையவனாய் அவன் காணப்பட்டான். அதோடு கம்பெனி அதிகாரிகள் அவன் மீது காட்டிய கவனிப்பிற்கு மிகுந்த நன்றியுள்ளவனாயும் அவன் காட்சி அளித்தான். அவனை நாங்கள் 'ராஜா ஆக்கியது பற்றி மற்ற யார் யார் என்னென்ன சொன்ன போதிலும், வறுமையிலிருந்தும் அவனை ஊர் பேர் தெரியாத நிலையிலிருந்தும் உயர்த்தி அரியணை தந்ததற்காகவும், ஒரு சீமையின் வருமானத்தையே அவனிடம் ஒப்படைத்ததற்காகவும், அவற்றின் பொருட்டு நாங்கள் பட்ட துன்பங்களுக்காகவும், செய்த முயற்சிகளுக்காகவும், அவன் எங்கள் பால் காட்டிய ஆழ்ந்த நன்றியையும் நாங்கள் மிகவும் பாராட்டினோம். இத்தகைய வேடிக்கை மனிதனால் வீர மறவர் சீமைக்கு நேர்ந்த வேதனை வாழ்வை எண்ணுந்தோறும் உள்ளம் புண்ணாகிறது. இந்தப் பொம்மை ராஜாவை வைத்துக் கொண்டு, மருது பாண்டியர்க்கு மாறாய்க் கம்பெனிப்பட்டாளம் திரித்துவிட்ட கதை-வதந்தி-பழிக்கயிறுகளின் நீளத்திற்கு ஒர் எல்லையே இல்லை. ஆனால், அந்தோ அக்கயிற்றின் அழகிலும் பலத்திலும் மயங்கிய மறவர் நாட்டு மக்கள், அது தங்கள் கழுத்தையே இறுக்க விடப்பட்ட கயிறு என்பதை அறியாது போனார்கள். அதன் விளைவாக மறவர் சீமை இரண்டு பட்டது. புதிய ராஜா, புதிய ராஜா என்று ஒரு கூட்டம் பிரிந்தது. மருது பாண்டியர் பலம் கோடை கால ஆறு போல வற்ற ஆரம்பித்தது. தங்கள் சுக வாழ்வையும் துறந்து, விடுதலைக்காகப் போரிட்ட அம்மாவீரர்கள், தங்கள் நாட்டின் ஒற்றுமை இவ்வாறு பிளவுபட்டது கண்டு அடைந்த துயரம் சொல்லும் தரமன்று. எனினும், உறுதியைக் கைவிடாது. அவ்வுத்தம வீரர்கள் கம்பெனிப்