பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பேராசிரியர் ந.சஞ்சீவி இப்பிரான் மலையில் முகாம் இட்டிருந்த மருது பாண்டியரது படையை மோதியது கம்பெனிப்படை. ஆனால், ஏற்கெனவே தமக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் சதிகளாலும், மறவர் நாட்டு மக்கட்கு இடையே ஏற்பட்ட பிளவாலும் மனம் உடைந்து போன மருது பாண்டியர் ஊமைத்துரை சேனையால் கம்பெனிப்படைகளை எதிர்த்துத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, கம்பெனிப் படைகள் பிரான் மலைக் கோவிலையும் கோட்டையையும் பிடித்துக் கொண்டன. இதற்குப் பின் கம்பெனிப்பட்டாளம் புதிய ஊக்கத்தோடு காளையார் கோவிலை நோக்கித் தன் இறுதித் தாக்குதலை நடத்த ஒரே பாய்ச்சலாய்ட் பாய்ந்தது. மருது பாண்டியருக்கு உயிர் நாடியாய் இருந்த இக்காளையார் கோவிலைப் பிடிப்பதற்கான கடும்போர் ஆறு நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலம் பொருந்திய காளையார் கோவிலைப் பிடிக்கும் பொருட்டுக் கம்பெனிப்பட்டாளம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று வழிகளில் அனுப்பப்பட்டது. பிரான் மலையைப் போலவே காளையார் கோவிலும் கோவிலாய் மட்டும் அன்றிக் கோட்டையாயும் இருந்தது. பதினெட்டடி உயரமுடைய கற்சுவர்களால் சூழப்பட்ட கோவிலாய் இருந்தது காளையார் கோவில்! வெல்ஷ் கூறுவது போலக் காளையார் கோவிலைச் சுற்றியிருந்த கோட்டைச் சுவர்கள் மிகப் பெரியனவாயும் உறுதி படைத்தனவாயும் விளங்கின. ஊருக்குள் எங்கும் எழிலும் ஏற்றமும் நிறைந்த மாளிகைகள் காணப்பட்டன. இத்தகைய பெருநகரைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து வந்த பரங்கிப் பட்டாளத்தையும் கூலிப்படைகளையும் எதிர்த்து வழி மறித்து, இரண்டு இடங்களில் மருது பாண்டியரும் ஊமைத்துரையும் கடும் போர் நடத்தினர். அப்போரில் கம்பெனி வீரர்களுள் கணக்கற்றவர் வீர மறவரின் வாளுக்கு இரையாயினர். எவ்வாறோ கம்பெனிப்பட்டாளம் தமிழர் படையின் ஆத்திரத் தாக்குதலினின்றும் தப்பிக் காளையார் கோவிலுக்குள் நுழைந்து விட்டது. எந்த அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் வீரபாண்டியனைத் துக்கிலிடுவதன் மூலம் பாளையக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து நடத்திய போரின் ஒரு முக்கியக் கட்டம் முடிந்ததோ, அதே அக்டோபர் மாதத்தில், சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்துப் பாளையக்காரரின் வீரப்போரின் முடிவிற்குரிய அறிகுறிகள் தோன்றின. காளையார் கோவிலுக்குள கம்பெனிப் படைகள் நுழைந்த சமயம் வீரன் ஊமைத்துரையின் உள்ளமும் மருது பாண்டியர் நெஞ்சமும் பெரிதும் இடிந்து போய் இருந்தன. நம் நாட்டு மக்களே - தமிழ் நாட்டு மக்களே - தங்கள் ஒற்றுமையை அறியாமையால் சிதறவிட்டு, அயலானுக்கு இடம்