பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 58 கற்றானோ, அவனே மருது சகோதரர்களையும் ஊமைத்துரையையும் எப்படியாவது பிடித்துத் தர வேண்டும் என்று நன்றி கெட்ட நெஞ்சத்தோடு துடியாய்த் துடித்தான் என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது! இந்நிலையில் ஒரு நாள் கம்பெனிப்படை காடுகளை எல்லாம், மூலை முடுக்குகளை விடாது துருவித்துருவித் தேடிக் கொண்டிருக்கும் போது, தம் உயிரினும் இனிய படை வீரர்கள் உயிர் வாழ உணவின்றி அவதிப்படும் நிலையை எண்ணி, உள்ளமும் உடலும் சோர்ந்து, உடைவாள் ஒன்றே துணையாகத் தனி வழியே ஊமைத்துரையும் மருது சகோதரரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். வேட்டை நாய் போல இதை எப்படியோ மோப்பம் பிடித்த கம்பெனிச்சிப்பாய்கள், அவர்களை வளைத்துப் பிடிக்கப் பாய்ந்தார்கள். ஆனால், மருது சகோதரர்கள் மூச்சுள்ள வரை போராடும் தீரர்கள் அல்லவா? முப்பெருவீரர்கட்கும் கம்பெனிச் சிப்பாய்கட்கும் இடையே வெறிபிடித்த போர் - இறுதிப்போர் - நடந்தது. அப்போரிலும் கம்பெனிச்சிப்பாய்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி, மருது சகோதரர்களும் ஊமைத்துரையும் வெற்றி பெற்று விடுவார்களோ என்ற நிலை இருந்த போது, கொலைகாரக் கம்பெனிப்படையைச் சேர்ந்த ஒரு பாவி சுட்ட துப்பாக்கிச் சூடு, அந்தோ பெரிய மருதுவின் தொடையில் பாய்ந்து எலும்பை முறித்தது எந்த மாவீரன் எந்தக் கன்னித் தமிழ் நாட்டின் உரிமையை - மானத்தைக் - காக்கப் போரிட்டானோ, அவனே அதே தமிழக மண்ணில் காலூன்றி நிற்கவும் வலிமை அற்றவனாய், தரையில் - தமிழ்த் தாயின் மடியில் சாய்ந்தான். தான் பெற்ற வீரமைந்தன் இவ்வாறு தன் நாட்டு மக்களாலேயே கைவிடப்பட்டு அயலான் ஆயுத வெறிக்கு இரையாகி, அவதிப்பட்டு வீழ்ந்த காட்சியைப் பொறாதவளாய்த் தமிழ் அன்னை சிந்திய குருதிக் கண்ணீர் போல அவன் தொடையிலிருந்து வழிந்த தியாக இரத்தம் தமிழ் மண்ணை நனைத்துப் புனிதமாக்கியது ஆம்! அவன் குருதி பட்டுத் துய்மையான வீர மண்னேதான் நம் தாயகமாம் தமிழ் நாடு! பெரிய மருது உணர்ச்சியற்றுத் தரையில் சாய்வது கண்டதும், தன் வீரவாளைச் சுழற்றிக் கம்பெனிச் சிப்பாய்களது கழுத்தைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த ஊமைத்துரை, உடைவாளை வீசி எறிந்துவிட்டுப் பெரிய மருதுவை நோக்கித் தாவிப் பாய்ந்தான். உடுக்கை இழந்தவன் கைபோலத் தனக்கு உற்றுழி உதவிய ஆருயிர் நண்பனுக்கு நேர்ந்த ஆபத்தைக் கண்டு உயிர் துடித்து, அவ்வீரனைக் காக்கத் தாவிப்பாயும் ஊமைத்துரையைக் கண்டதும், கூலிச் சிப்பாய்களுக்கு இடையில் சிங்கம் போலப் போரிட்டு, அவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த சின்ன மருதுவும், வேங்கை போலக் கண்களில் தீச்சுடர் பறக்க ஓடி வந்து, உத்தம உடன் பிறப்பான பெரிய மருதுவைத் தன் இரு கைகளாலும் தூக்கித் தன் மடிமீது சாத்திக் கொண்டான். கல்லும் மண்ணும் கண்டு கலங்கும் இத்துயரம் நிறைந்த காட்சியைக் கண்டும் எஞ்சியிருந்த கம்பெனிச் சிப்பாய்களின்