பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 60 ஏகாதிபத்திய வெறியர்கள், ஊமைத்துரையை மட்டும் அதே இடத்தில் துக்கிலிடவில்லை. குருதி வெறி பிடித்த அந்தக் கொலைகாரக் கூட்டம் ஆளைக் கொல்லுவதிலுங்கூட இடம் பார்த்து, நேரம் பார்த்து, நிலைமை பார்த்தல்லவா கொல்லும்! - பாஞ்சைப் பதியின் விடுதலைக்காக அண்ணனைப் போலவே - அல்ல அண்ணனைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகமாகவும் ஆவேசமாகவும் போரிட்ட அந்த ஊமைத்துரையை, அவன் சொந்தச் சீமையின் தலைநகராகிய பாஞ்சைப்பதிக்கே கொண்டு போய், அங்குள்ள பழைய பீரங்கி மேட்டிலேயே மரம் நட்டு, வாய் வல்லமையினும் வாள் வல்லமையே பெரிது எனக் காட்டிய பெரியோனை - தலையாய தமிழ் வீரனை - துக்கிலிட்டுக் கருணையின்றிக் கொலை செய்தார்கள் கொடிய வெள்ளையர்கள்! வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போலவே, தூக்கிலிடப்பட்டுக் கொலையுண்ட அந்த மாவீரர்கள் சாகும் தறுவாயில் என்னென்னவெல்லாம் நினைத்தார்களோ அவர்கள் எதை நினைத்திருந்தாலும், நினையாமற் போயிருந்தாலும், இவற்றை மட்டும் உறுதியாக நினைத்திருப்பார்கள்: 'அந்தோ தமிழகமே, உனக்காக உன் மானத்தைக் காக்க, ஆண்டுக் கணக்காக - அல்லும் பகலும் அதே நினைவாகப் போராடினோம் துணிச்சல் நிறைந்த வீரர்களைப் பெற்ற உன் திருவயிறு, துரோகிகளையும் பெறாமல் இருந்திருந்தால், நிறத்தால், பேசும் மொழியால், பண்பாட்டால், எல்லாவற்றிலும் முற்றிலும் அயலாரான பிற நாட்டு வெள்ளையர் இப்படி எங்களைத் துக்கிலிட்டுக் கொன்று கொக்கரிக்கும் அவமானம் நிறைந்த தீய நிலை ஏற்பட்டிராது. தொலையட்டும் நாங்கள் போகிறோம். ஆனால், எங்கள் வாழ்வு கற்பிக்காத பாடத்தை உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் எங்கள் வீரச் சாவாவது கற்பிக்கட்டும்! நாங்கள் சாகிறோம். ஆனால், எங்கள் குறிக்கோளும் நாங்கள் தொடங்கிய போராட்டமும் சாகா: அவை தொடர்ந்து நடைபெறும். அவற்றிற்கு வெற்றியன்றி வீழ்ச்சி இல்லை." ஆம். அந்த வீரப் பெருமக்கள் இவ்வாறு எண்ணிய எண்ணம் வீணாகவில்லை. அவர்கள் இறந்தார்கள். ஆனால், அவர்களது குறிக்கோள் இறக்கவில்லை. அது வெற்றியே பெற்றது. தமிழகத்தின் மன்னர்களாலேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழ் மக்களால் பண்படுத்திப் பாரறியச் செய்யப்பாடு பட்ட மனித குலத்தின் மணி விளக்காம் மகாத்துமாவால் வீழ்ச்சி காணாத வெற்றியோடு முடிந்தது தூக்கு மரத்தில் தொங்கி விடுதலைத் தேவியின் திரு முன்பில் களப்பலியான மருது பாண்டியரது ஆவி பிரியும் நேரத்தில் - தூக்கிலிடப்பட்ட அவர்களது கடைசி மூச்சும ஒடுங்குவதற்கு முன்