பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பேராசிரியர் ந.சஞ்சீவி எஞ்சியிருந்தவர்கள், மருது சகோதரர்களைச்சார்ந்த70 வேலையாள்களும், நண்பர் சிலரும். சின்ன மருதுவின் அருமை மகனும் பதினைந்து ஆண்டுகளே நிரம்பியவனும் ஆகிய துரைசாமியுமே ஆவார்கள். இவர்களுள் யாரையும் கொலை செய்யாமல், தீவாந்தர தண்டனை விதித்துக் கடலுக்கு அப்பால் உள்ள, 'பிரின்ஸ் ஆப் வேல்ஸ் என்ற தீவில் கொண்டு போய்த் தவிக்கவிட முடிவு செய்தது இரக்கமே வடிவான கிழக்கிந்தியக் கம்பெனி முக்கியமாகப் பதினைந்தே வயதான துரைசாமி தூக்கு மரத்தில் துடிதுடித்துச் சாகுமாறு செய்வது அவர்கள் கொலை நெஞ்சிற்கும் ஒவ்வாத கொடிய செயலாகப் பட்டது போலும் ஆம் கொலையாளியின் பகை நெஞ்சையும் உருக்கியது அவ்விளைஞனது கள்ளமற்ற இனிய முகம். அவ்விளைஞனையும் அவனோடு சேர்ந்த எழுபது பேர்களையும் துத்துக்குடித் துறைமுகத்திலிருந்து காப்பாகக் கப்பலேற்றிக் கண் காணாத ஒரு கண்ணற்ற தீவில் ஆயுட் காலம் வரை அடைபட்டுக் கிடந்து சாகும்படி அனுப்பும் மிக முக்கியமான கடமை கர்னல் வெல்ஷ் துரைக்கே கிடைத்தது. உடுத்த உடையோடு, குற்றமற்ற முகத்தில் ஒளி வீசும் பதினைந்து ஆண்டு இளைஞனையும் அவனைச் சார்ந்தோரையும் பெற்ற தாய் நாட்டினின்றும் ஒரேயடியாகப் பிரித்துக் கடலுக்கு அப்பால் அனுப்பும் கொடுமையைக் கல் நெஞ்சத்தோடு தான் ஈடேற்றிய போது அவ்விளைஞனும் அவனைச் சார்ந்தோரும் இருந்த காட்சியையும், அதைக் கண்டதன் நெஞ்சில் பீரிட்டு எழுந்த உணர்ச்சிகளையும் கர்னல் வெல்ஷே சொல்லட்டும், கேட்போம். இதோ கர்னல் வெல்ஷ் கூறும் உணர்ச்சி நிறைந்த செய்திகள்: போர் முடிந்ததும் எஞ்சியிருந்த பகைவர்களை எல்லாம் கப்பலேற்றித் தீவாந்தரம் அனுப்பும் பொறுப்பை நானே ஏற்க வேண்டியதாயிற்று. சின்னமருது மைந்தன் தனக்கு நேர்ந்த விபத்தை நொந்த உள்ளத்தோடு, ஆனால் கம்பீரமாகப் பொறுத்துக் கொண்டான். பெருந்தன்மையும் தியாக உணர்ச்சியும் தவழும் முகத்தோடு விளங்கிய அவ்விளைஞன் - இனிய பண்புகள் படைத்த அந்நல்லோன் - தன் கொடிய தலை விதியை ஒரு சிறு முணுமுணுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவனுடைய அழகு பொருந்திய திருமுகத்தில் குடி கொண்டிருந்த அந்த ஆழ்ந்த துயர உணர்ச்சியைக் கண்ணால் காண்பதும், கண்டு கலங்காமல் இருப்பதும் அறவே முடியாத செயல். அவன் எனது நேரடியான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந் தமையால், நான் அவன் தப்பி ஓடுவதற்கு உடந்தையாய் இருக்க முடியவில்லை. ஆனால், பலத்த பாதுகாப்புடைய ஒரே இடத்தில் நானும் அவனும் இருந்தமையால், அவனைத் தன் வேலையாள்களுக்கு நடுவிலேயே அவமானம் தரும் கைவிலங்குகளோடு நிற்கும் காட்சியினின்றும் விடுதலை செய்யக் கருதி, தன் முன்னாள் வேலையாள்களிடமிருந்து தனியாகப் பிரித்து வைத்தேன். அவன் கை விலங்குகளையும் கழற்றும்படி செய்தேன். அவ்வாறு நான் என்னுடைய வருந்தத்தக்க பழைய நண்பன் சின்ன மருதுவின் மக்களுள் தப்பி உயிரோடிருந்த அந்த ஒரே மைந்தன் - பதினைந்தே ஆண்டான இளைஞன் - நிலையான தீவாந்தர வாசத்திற்கு இரையாக்கப்பட்டிருந்த துரைசாமியின்