பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வீரர்களை வணங்குவோம்! தமிழகத்தின் 'ஜிப்ரால்டர் என்று வெள்ளையராலேயே போற்றப்படும் பேரும் புகழும் படைத்து விளங்கியது பாஞ்சாலங்குறிச்சி. உலகம் முழுவதிலும் இணை காண ஒண்ணாப் பலம் பொருந்திய மிகப் பெரிய இயற்கை அரண்களைப் பெற்றுத் திகழும் ஜிப்ரால்டரை ஒருவர் பிடித்துவிட்டால், பின்பு மத்தியதரைக் கடல் முழுவதும் அவர் ஆதிக்கத்திற்கு உள்ளாவது எளிது. அவ்வாறே, பாஞ்சாலங்குறிச்சியை - தமிழகத்தின் ஜிப்ரால்டரை-வென்று விட்டால், தென்தமிழ் நாடு முழுவதும் தம் அடிப்படும். எனக் கருதினர் அத்தகைய வன்மையும் வான் புகழும் பெற்றிருந்த பாஞ்சாலங்குறிச்சியின் பெயரை மக்கள் நினைப்பினின்றும் அழித்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில், ஆணவத்தில், நாட்டுப் படங்களினின்றும் அகற்ற ஆணையிட்டது கம்பெனி வர்க்கம். மேலும், அத்திருநகரைத் தலைநகராகக் கொண்ட பாஞ்சைப் பதியிலும் அதைச் சுற்றிச் சூழ்ந்த நாட்டிலும் வாழ்ந்த வீர மறவர்கள், “மண்வெட்டிக் கூலிதின லாச்சே - எங்கள் வாள்வலியும் வேல்வலியும் போச்சே விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே - இந்த மேதினியில் கெட்டபெய ராச்சே' என்று நெஞ்சம் துடிக்கும்படி அவர்கட்கு நேர்த அழிவை நினைத்தே ஆத்திரமுற்றுப் பாடுவது போலப் பாரதியார் பாடியுள்ள இக்கவிதை காட்டும் காட்சியே கன்னித்தமிழகத்தின் நிலையாயிற்று. இவ்வளவு கொடுமைகளையும் செய்த பேரரசு இன்று அழிந்து தொலைந்து விட்டது! அதன் அழிவிற்காக ஒரு துளி கண்ணிர் விட்டும் எவரும் அழவில்லை. ஆனால், பாஞ்சைப்பதியின் வீர வரலாற்றையும், வீர பாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது பாண்டியர் ஆகியோரது வீரவாழ்வையும் எண்ணுந்தொறும் நன்றி உணர்ச்சியால் கண்கலங்கி மெய்நடுங்கும் மக்கள் தமிழக மெங்கும் நிறைந்துள்ளார்கள். வெள்ளையரால் விளைந்த எவ்வளவோ கொடுமைகட்குப் பின்னும் தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்கள் உள்ளத்தில் மருது பாண்டியர்களைப் பற்றிய நினைவு ஒரு சிறிதும் மங்கவில்லை. இந்த உண்மையை அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில், காந்தி மகானது விடுதலைப் போர் தொடங்கப்பெறாத இருள் சூழ்ந்த காலத்தில். 1891 ஆம் ஆண்டு, மேத்