பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பேராசிரியர் ந.சஞ்சீவி திங்களில், தென்பாண்டிச் சீமையில் இன்பத் தமிழ் ஏடுகளைத் தேடிச் சுற்றுப்பயணம் செய்த காலஞ்சென்ற டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தாம் எழுதியுள்ள 'என் சரித்திரம்' என்ற தனிச்சிறப்பு நூலில் எவ்வளவு உணர்வோடு சித்திரித்துள்ளார் என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளல் பொருத்தமும் பயனும் உடையதாகும். "குன்றக்குடியைச் சார்ந்த இடங்களிலெல்லாம் ஜனங்கள் மருது பாண்டியரைப் பற்றிய வரலாறுகளையும் கொடையையும் பாராட்டியும் அவரைப் பற்றிய தனிப் பாடல்களைச் சொல்லியும் இன்புற்றனர். 'சிறுவயல் ஜமீந்தாரும் பல வரலாறுகளைச் சொன்னார் நான் வசித்து வரும் இந்த மாளிகை மருதுபாண்டியர் இருந்த அரண்மனையாகும். அதனால், இவ்வூருக்கு அரண்மனைச் சிறுவயலென்னும் பெயர் உண்டாயிற்று. சிவகங்கைச் சம்ஸ்தானத்துத் தலைவர்களுள் அவரைப் போலப் புகழ் பெற்றவர் சிலரே. தம்முடைய வீரத்தால் சம்ஸ்தானத் தலைமையை அவர் பெற்றார். அவர் மிக்க தெய்வபத்தி உடையவர். பல ஸ்தலங்களில் அவர் திருப்பணி செய்திருக்கிறார்; முக்கியமாகக் குன்றக்குடியில் சில மண்டபங்களைக் கட்டியிருக்கின்றார். அவரால் செப்பம் செய்யப்பட்ட திருக்குளம் மருதாபுரி என்ற பெயரோடு இப்போதும் விளங்குகிறது. அவருடைய சம்ஸ்தானத்தில் இருபத்தொரு தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள். அவரைப் பாராட்டி அவர்கள் பாடிய செய்யுள் பல. ஜமீந்தார், மருது பாண்டியருடைய கல்வியிலும், கொடையிலும் வீரத்திலும் ஈடுபட்டவராதலின், மணிக்கணக்காக அவர் புகழை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார். தென்பாண்டி நாட்டில் இன்றும் மருது பாண்டியர் புகழைப் பேசாமல் பேசிக் கொண்டிருக்கும் எத்தனையோ வரலாற்றுத் தொடர்புடைய செல்வங்கள் உள்ளன. சான்றாகக் குன்றக்குடிக் கோவிலில் மருது பாண்டியர் கட்டியுள்ள மண்டபங்கள், அவர் புதுப்பித்த குளம், காளையார் கோவிலில் வீரர்களால் கட்டப்பட்ட சோமேசுவரசுவாமி கோவில், அங்கே உள்ள இவர்களது சமாதி, அதற்கருகில் இவர்கள் தாயாரால் வெட்டுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊருணி, காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் இடையே உள்ள சங்கரப்பதிக் காட்டில் பாழடைந்து கிடக்கும் சங்கரப்பதிக் கோட்டை, அக்கோட்டையில் காணப்படும் சுரங்க வழி, மருது பாண்டியர் புகழுடன் தொடர்புடைய இத்தகைய பிற இடங்களையும் கட்டடங்களையும் விடுதலை இந்தியாவின் அரசு, தலை சிறந்த வரலாற்று நினைவுகளாகக் கருதி என்றென்றும் போற்ற வேண்டும். மருது பாண்டியர் தியாகத்தால் மனத்தைப் பறிகொடுத்த நம் தமிழ் நாட்டுக் கலைஞர்கள், குன்றக்குடியிலும் மருது பாண்டியருடைய சமாதிகள் உள்ள காளையார் கோவிலிலும் மிகப் பெரிய அளவில் அவ்விரு உடன்