பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பேராசிரியர் ந.சஞ்சீவி பெற்ற விடுதலையைப் போற்றிப் பாதுகாக்க, எனவே, நமக்காகவும் நம் தாயகத்தின் மானத்திற்காகவும் போராடிய அப்பெருவீரர்களை வணங்குவோம்! வரலாறாய், காவியமாய் விளங்கும் அவர்கள் வாழ்வில் நம் அறிவை - நெஞ்சைப் பறிகொடுப்போம்! மானத்தோடு வாழ்ந்து, மானங்காக்கவே போராடி, மானத்துக்காகவே துக்கு மேடையிலும் ஏறி, சாவு வருக மானம் வாழ்க!' எனப் புன்முறுவலோடு அப்பெருவீரர்கள் உயிர் துறந்த அந்த ஒப்பற்ற காட்சியை நம் மனக்கண்களால் காண்போம்! துக்குமேடையில் தாய் நாட்டின் மானத்திற்காகத் தொங்கிய அத்திருவுருவங்களை எண்ணும் போது பொங்கி வரும் கண்ணிரைத் துடைத்து விட்டுப் புதிய தமிழகத்தை, புதிய இந்தியாவை, புதிய உலகை ஆக்கும் பணியில் அனைவரும் ஒன்றுபட்டு முனைவோம்! வாழ்க மருது பாண்டியர் புகழ்!