பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பேராசிரியர் ந.சஞ்சீவி தளராதிருந்த பாண்டியர் ஆட்சி தளரலாயிற்று என்பது கல்வெட்டுக்களால் விளங்கும் வாய்மையாகும். ஆயினும், ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பாண்டியர்கள் ஆட்சி தளர்வுற்ற நிலையிலும் தலை கவிழாது நிலைத்திருந்தது என்றே கூறலாம். மேலும், சில கல்வெட்டுக்களையும் இலங்கையின் வரலாறு கூறும் மகாவமிசத்தையும் துணையாகக் கொண்டு ஆராயுமிடத்து, பாண்டி மன்னர் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை மீது படையெடுத்துப் பெரிய இடர்ப்பாடு எதுவுமின்றி வெற்றியுறும் அளவிற்குப் பலம் வாய்ந்து இருந்தது பாண்டியர் ஆட்சி என்பதும் புலனாகிறது. இதற்குப்பின் மூன்று நூற்றாண்டுகளுக்குச் சோழப் பேரரசு தலை துக்கி நின்றது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் பாண்டி நாட்டின் ஆட்சி முழுதும் சோழர் வசம் ஆயிற்று. இம்முதலாம் பராந்தகச் சோழன், தன்னை மதுரையின் ஆட்சியைக் கைப்பற்றியவன்' என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டான். இவ்வுண்மையை ஈழ நாட்டின் மீதும் படையெடுத்து வெற்றி கண்ட இவன் பெயரால் தென்குமரி முதல் திருக்காளத்தி வரை பரவிக் கிடக்கும் கல்வெட்டுக்கள் பறை சாற்றுகின்றன. ராஜராஜன் காலத்திலும், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திலும் சோழ ஆட்சியைப் பொறுமையோடு ஏற்று வந்த பாண்டி நாடு, முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் சுதந்தர வேட்கை கொள்ளலாயிற்று. அவ்வேட்கைத் தீ வளரச் சேரரும் சிங்களவரும் நெய் வார்த்தனர். ஆயினும், எடுப்பில் தோல்வியே எதிர்ப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய சோழ-பல்லவர் போராட்டம், எத்தனையோசோதனை நிறைந்த கட்டங்களைக் கடந்து, 12-13-ஆம் நூற்றாண்டு வரை நடந்தது. அந்நூற்றாண்டுகளிலேதான் சோழரின் வீழ்ச்சி வேகம் கொள்ள ஆரம்பித்தது. சோழரின் வீழ்ச்சி பாண்டியரின் எழுச்சிக்கு வித்தாயிற்று. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சங்கிலித் தொடர் போலப் பிற்காலப் பாண்டிய் மன்னர் சிலர் ஒருவர் பின் ஒருவராய்ப் பாண்டிநாட்டை ஆண்டனர். இம்மன்னர் வரிசையில் சற்றேறக்குறையப் பதினைந்து மன்னர்களைப் பற்றிய செய்திகள் நமக்குக் கல்வெட்டுக்களால் தெரிகின்றன. 12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டி நாட்டில் அரசோச்சிய இம்மன்னர்களின் ஆட்சிக் காலம், நிகழ்ச்சிகள் நிறைந்த சரித்திர காலமாகக் காட்சி அளிக்கிறது. மார்க்கபோலோவைப் போன்ற மேனாட்டு யாத்திரிகர்களும், முகம்மதிய சீன சிங்கள வரலாற்று அறிஞர்களும், 13-ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பாண்டி நாடு செல்வச் செருக்குடனும் வெற்றிப் பெருமிதத்துடனும் புகழின் உச்சியில் வீற்றிருந்த பெற்றியினை ஒரு மனமாக ஒத்துக் கொல்லத்திலிருந்து வடக்கே நெல்லூர் வரை விரிந்து பரந்து செல்வக் களியாட்டில் செம்மாந்திருந்த பாண்டி