பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 78 நாட்டைத்தான் மார்க்க போலோ உண்மையான பெரிய இந்தியா என்றும், 'உலகிலேயே அழகும் பெருந்தன்மையும் பொருந்திய பூமி இதுவே, என்றும் உவகையோடு குறிப்பிடுகிறார். அக்காலத்திலேதான் பாண்டிநாட்டின் பார்த்திபர்கள் மங்கோலிய மன்னன் குப்ளேகானுக்குத் தங்கள் அரசியல் தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள் என்று சீன வரலாறு செப்புகிறது. சுருங்கச் சொன்னால், இரண்டாவது முறையாகப் பாண்டி நாடு எண்டிசையும் புகழ் மணக்க விளங்கியது என்னலாம். இதை அடுத்து வாழ்வுக்குப்பின் தாழ்வு வருகிறது. இக்காலத்திலேதான் வடநாட்டு முகம்மதியர் தென்றமிழ் நாட்டின் மீது படையெடுத்தனர். டில்லி முகலாய சக்கரவர்த்தியான அல்லாவுதீன் என்பானுடைய படைத்தலைவன் மாலிக்காபூர் தக்காணத்தைப் பிடித்துக் கொண்டு, பாண்டி நாட்டை ஊடுருவி, இராமேசுவரம் வரை சென்று, தன் படைவலியின் அடையாளங்களை அங்கு ஏற்படுத்தினான். அவ்வமயம் பாண்டி நாட்டில் தலை விரித்தாடிய அழிவையும் துயரையும் நாம் வரலாற்றுச் சுவடிகளில் படிக்கும்போது வருத்தமே மிகுகிறது இறைவா, இனி ஒரு போதும் இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறச் செய்ய வேண்டா என்று நம்மை அறியாமல் நம் நெஞ்சம் இறைவனைப் பிரார்த்திக்கிறது. மாலிக்காபூரின் படையெடுப்பால் நிலைகுலைந்து போன பாண்டி நாடு, 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய விஜய நகர ஆட்சியால் ஒரு வகையில் - ஒருவாறு - புத்துயிர் பெறலாயிற்று. புகழ் சான்ற விஜயநகரப் பேரரசின் தென்கோடி நிலையமாய் மதுரை மாநகரம் விளங்கியது. விஜய நகர ஆட்சியின் வேரிலே கிளைத்ததுதான்நாயக்கர்கள் ஆட்சி. இந்த ஆட்சிக்காலத்தையும் இதைத் தொடர்ந்து வரும் ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சியையும் பற்றியே நாம் சிறிது அதிகமாகக் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நாயக்கர் ஆட்சி பாண்டி நாட்டை ஆட்கொண்டிருந்தது. இந்நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளுட்சில, நாம் ஆராய இருக்கும் வீரத் தலைவர்களின் வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடையனவாகும். பழம்பெரும் பாண்டி நாட்டின் எல்லைகளைப் பற்றிச் சற்றுமுன் சிந்தித்தோம். அவற்றின் படி இற்றை நாள் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுர மாவட்டங்களும் திருவாங்கூர்க் கொச்சியின் ஒரு பகுதியும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும் பாண்டி நாட்டின் நிலப்பரப்பு எனக் கொள்ளலாம். இனி இப்பாண்டி நாட்டின் கீழ்த்திசையில் இப்போது இராமநாதபுர மாவட்டம் உள்ள பகுதி, பண்டு தனி அரசுக்குரிய மறவர்