பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 80 இவ்வாறு சேதுநாடு தந்த செந்தமிழ்ப் புலவர் பெருமானராகிய திரு. மு. இராகவையங்கார் தம் நூலில் எழுதிச் செல்கிறார்." புகழ் மிக்க இச்சேதுபதிகளின் இதிகாச - புராண - காவிய காலப் பழமையைப் பற்றியும் அவர்களது சென்ற காலச் சிறப்புக்களைப் பற்றியும் 'இராமநாதபுர மானுவல் விரிவாகப் பேசுகிறது. சேதுபதிகள் குடும்பமும் அவர்கள் ஆட்சியும் மிகவும் தொன்மை வாய்ந்தன என்பதில் ஓர் ஐயமும் இல்லை. ஆனால் அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிய காலத்தை அறுதியிட்டு உரைப்பது அரிது. கிடைத்துள்ள சான்றுகள் அவர்கள் பாண்டியப் பேரரசு சிதைவுற்ற காலத்தில் பெரும்புகழ் மேவத் தொடங்கினர் என்று நம்மை ஊகிக்க வைக்கின்றன. என்று இராமநாதபுர மானுவல் ஆசிரியர் கூறும் வாசகம் மட்டும் இங்கு நினைவில் இருத்ததற்கு உரியது. மேலும், அவர் ஒரு சுவையான குறிப்பையும் தம் அரிய ஆராய்ச்சி நூலில் தெரிவிக்கிறார்." 'இராமபிரானாரால் ஆட்சியிலமர்த்தப்பட்ட முதல் சேதுபதி, அப்பெருமானாரிடமிருந்து வளைதடி என்ற ஆயுதத்தையும் பெற்றார் எனக் கூறப்படுகிறது. அவ்வளைதடி ஓர் அரைவட்ட வடிவினதாய் உள்ளது. அது யாத்திரிகர்களின் நம்பிக்கையில் இராமபிரானார் பயன்படுத்தும் சக்கரத்தின் ஒரு பாதியைச் சுட்டுவதாகும். இங்குக் குறிப்பிடப்படும் வளைதடி இராமநாதபுரம் மாவட்டத்தில் போர் வீரர்கள் பெரிதும் பயன்படுத்திய ஆற்றல் மிக்க கருவியாகும். இதன் வல்லமையைப் பற்றி அறிவதற்கான வாய்ப்புக்கள் பல இந்நூலினுள்ளே பற்பல இடங்களிலும் வருகின்றன. பலம் பொருந்திய - இராமநாதபுர மாவட்டத்திற்கே உரிய - இவ்வாயுதம், தமது வில்லால் மூவுலகையும் தொழவைத்த இராமபிரானார் தொடர்பால் எவ்வளவு பழமை எய்திவிடுகிறது! ஆம், இராமபிரானார் தமிழ் நாட்டின் தலையாய வீரர்களுக்குத் தந்த பரிசு இணையில்லாப் பரிசேயாகும்: பழமை வாய்ந்த சேதுபதிகளின் பரம்பரையில் தோன்றிய சடையக்கத்தேவர் எனப்படும் உடையன் சேது பதியே சரித்திர பூர்வமான நம் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கும் முதல் சேதுபதி. கி.பி.1605 முதல் 1621 வரை மறவர் நாட்டை ஆட்சி புரிந்த இவருக்குப்பின் சற்றேறக்குறைய 15 சேதுபதிகள் இராமநாதபுரச் சீமையை ஆண்டு மங்காப் புகழ் பெற்றார்கள். முதல் சேதுபதியாகிய சடையக்கத் தேவர். மதுரையை அப்போது ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் பேராதரவால் அரியணை ஏறினார். காடுகளும் கள்வர் பயமும் நிறைந்திருந்த மறவர் நாட்டில் இராமேசுவரம் செல்லும் யாத்திரிகர்களை - குறிப்பாக மதுரை நாயக்கர்களின் குரு ஒருவரை - புண்ணிய யாத்திரை செய்து முடியும் வரை பத்திரமாகப் பாதுகாத்துப் புகழ் கொண்டமையால், சடையக்கத் தேவர் மதுரை நாயக்கர்கள் பால் பெற்ற சன்மானமே இராமநாதபுர ராஜ்யம் என்று சொல்வது ஒரு வகையில் உண்மையே ஆகும். தம் காலத்தில் மதுரையை