பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 84 பகுதிகளைச் சேர்த்துக் கொள்ள அனுமதித்தார். தாம் மதுரையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நவராத்திரி விழாவைச் சேதுபதியும் சிறப்பாகக் கொண்டாட இசைந்தார். சுருங்கச் சொன்னால், எல்லா வகையிலும் தமிழகத்தின் அரசியலில் சேதுபதிக்குச் சிறப்பு வாய்ந்ததோர் இடம் உண்டாகச் செய்தார் நன்றி உள்ளம் படைத்த திருமலை நாயக்கர் என்னலாம். தம்பால் நாயக்கர் காட்டிய பேரன்பைச் சேதுபதியும் எதிரொலிக்க விரும்பினார். அந்த விருப்பம் ஒரு வகையில் விபரீதமாயும் மாறியது. ஆம், செந்தமிழ்ப் பகுதியாகிய இராமநாதபுரத்தில் தெலுங்கை அரசியல் மொழியாக்கத் தீவிரமாக முயற்சி செய்தார் இரகுநாதர். ஆனால், அவர் முயற்சி வெற்றி பெறவில்லை. வடுகர் மொழி ஆளும் மொழியாவதை மறவர் நாடு சிறிதும் வரவேற்கவில்லை. திருமலைச் சேதுபதி மைசூர் நாட்டவரைப் போரில் புறங்கண்டது போலவே, திருமலை நாயக்கருக்குத்துணையாய் நின்று மதுரையின் மீது படையெடுத்து வந்த கூகுப்கானையும் வென்று, தேசகாவலன்' என்னும் புகழ் பெற்றார்; அவ்வாறே மதுரை நாயக்கரை எதிர்த்து எட்டயபுரப் பாளையக்காரர் தலைமையில் போர் முனை புகுந்த திருநெல்வேலிப் பாளையக்காரர் படையையும் முறியடித்தார். இதற்குக் கைம்மாறாகத் திருமலை நாயக்கர் திருநெல்வேலியைச் சேர்ந்த மன்னர் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு பெரிய நிலப்பகுதியைப் பரிசிலாக அளித்தார். மதுரை ஆட்சிக்குப் பெருவளம் சுரந்து வந்த முத்துச் சலாபத்திலும் ஓரளவு சேதுபதி பங்கு பெறச் செய்தார். இங்ங்ணம் கால் நூற்றாண்டு மறவர் சீமையைக் காசினி போற்ற ஆண்ட பின் இரகுநாத சேது பதி 1672-ல் காலமானார். இரகுநாத சேதுபதிக்குப்பின் அரசபீடம் ஏறியவர் இராசசூய சேதுபதி, இவர் ஆறே மாதத்தில் மாற்றார் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். இவருக்குப் பின் இவர் தம்பியார் ஆதன இரகுநாத சேதுபதி அரசுரிமை ஏற்றார். இவர் ஆட்சி மூன்றே மாதங்களில் முடிந்தது. இவ்விரு சகோதரர்கட்கும் பிள்ளைகள் இல்லை. எனவே, மறவர் நாட்டுத் தலைவர் பலரும் ஒன்று கூடி, 1674-ல் நாடாண்ட சேதுபதியின் உறவினரான இரகுநாத தேவர் என்னும் கிழவன் சேதுபதிக்கு முடி சூட்டினர். மறவர் நாட்டு வரலாற்றிலேயே இக்கிழவன் சேதுபதிக்குத் தனிப்புகழ் உண்டு. கூர்த்த அறிவும் ஆண்மையும் திறனும் ஒருங்கே பெற்றிருந்த சேதுபதியாய் இவர் முப்பத்தாறு ஆண்டுகள் ஆண்டார். ஆட்சிக்கு வந்தவுடனே இவர் தமது இரும்பு நெஞ்சத்தை வையகம் அறியச் செய்தார். தாம் ஆட்சிக்கு வருவதற்குப் பெருந்துணையாய் இருந்த செல்வாக்கு வாய்ந்த இரு தலைவர்களை நாளடைவில் அவர்களே தமக்கு விரோதிகள் ஆகக் கூடும் என்ற எண்ணத்தால் கொலை செய்து தீர்த்தார்.