பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 பேராசிரியர் ந.சஞ்சீவி அந்நாளில் தமது ஆட்சிக்குட்பட்டுப் புதுக்கோட்டையை ஆண்ட பல்லவராயன் என்பான் தமது கருத்துக்கு மாறாகத் தஞ்சை காவலனோடு கள்ள உறவு கொள்வதை அறிந்து, அவனை அரச பதவியினின்றும் அகற்றினார்; அப்பதவிக்குத் தாம் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டிருந்த கள்ளர் மரபைப் சேர்ந்த காதலி என்பாளின் சகோதரனாகிய இரகுநாதத் தொண்டைமானை அரசனாக நியமித்தார். இதுவே சமீபத்தில் முடிவடைந்த புதுக்கோட்டை அரசின் ஆரம்பம்! திருமலைச் சேதுபதியைப் போலவே கிழவன் சேதுபதியும் மதுரை மன்னரை மாற்றார் படையெடுப்பினின்றும் காப்பாற்றினார். ருஸ்தம்கான் என்பானின் கொடிய படையெடுப்பினின்றும் இவர் மதுரையை வெற்றியோடு காப்பாற்றியமையால், பரராஜகேசரி' என்ற பட்டப் பெயரை அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின் எக்காரணத்தாலோ, கிழவன் சேதுபதிக்கும் மதுரை மன்னருக்குமிடையே மன வேறுபாடு தோன்றிப் போர் மூண்டு வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இப்போர் முடிந்த சில நாள்களுக்குப் பின் மீண்டும் ஒரு போர் இருதரப்பாருக்குமிடையே நடைபெற்றது. அதில், சேதுபதியே வெற்றி பெற்றார். மதுரை மன்னரின் படைகள் பின் வாங்கி ஓடின. இவ்வெற்றிக்குப் பின் தஞ்சை மன்னரோடு போரிட்டு அம்பரை ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதிகளைத் தம்முடையனவாக்கிக் கொண்டார் கிழவன் சேதுபதி, மதுரையை அப்போது ஆண்ட மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோய்க்கு இரையாகி, 1689-ல் இறந்தார். அவருக்குப் பின் மதுரையின் ஆட்சி மங்கம்மாள் கைக்கு மாறியது. அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பர் இறக்கும் போது அவர் மனைவி கர்ப்பவதியாய் இருந்தாள். பின்னர்ப் பிறந்த அக்குழந்தை, விஜயரங்க சொக்கநாதர் என்ற பெயர் சூட்டி மூன்றே மாதங்களில் முடிகவிக்கப் பெற்றது. ஆனால், நாட்டின் அரசியல் நிருவாகம் முழுவதும் மங்கம்மாள் கையிலேயே இருந்தது. இந்நிலையில் கிழவன் சேதுபதியின் ஆட்சி மறவர் சீமையில் நாளுக்கு நாள் உரம் பெற்று ஓங்கியது. மதுரை மன்னர்க்குச் சிறிதும் தலை வணங்காமல் சுதந்தர ஆட்சி நடத்தினார் கிழவன் சேதுபதி. இவ்வுண்மை மார்ட்டின் என்பார் 1700 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தாலும் உறுதிப்படுகிறது. அதோடு 1698-ல் மதுரையையே முற்றுகையிட்டுப் பிடித்தார் சேதுபதி என்றாலும், தளவாய் நரசப்பையர் மிக விரைவிலேயே மதுரையை மறவர் நாட்டுப் பிடியினின்றும் விடுதலை செய்தார் என்பது கூறப்படுகிறது. இதன் பின் தொடர்ச்சியாக 1702-ல் மங்கம்மாள் சேது நாட்டின் மீது படையெடுத்தாள். தஞ்சை அரசர் படையோடு திரண்டு வந்த நாயக்கர் பெரும்படைக்குத் தளவாய் நரசப்பையர் தலைமை தாங்கினார். ஆனால், இப்பெரும்படையை எளிதில் புறங்கண்டார் கிழவன் சேதுபதி. அதோடு தளவாய் நரசப்பையரும்