பக்கம்:மானிட உடல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மானிட உடல் சாதாரண நிலையிலுள்ள உயிருள்ள மானிட உடலால் உயிரியல் துறையில் ஒருசிறு பகுதி அறிவினை மட்டிலும்தான் அறிந்துகொள்ள முடியும் என்பதை இப் புத்தகத்தில் கூறி யுள்ளோம். புத்தகத்திலுள்ள பொருள் நல்ல முறையில் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தம்முடைய உடலைப்பற்றித் தெளி வாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவினையுடைய அறியவியலறிஞரல்லாத பிறரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறப்பெற்றுள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் உடல் தானே முக்கிய பங்கு கொண்டுள்ளது ஒரு பொருளைப் பற்றிய குறைந்த அறிவு தீங்கினத்தான் பயக்கும் , அறிவுக் குறைவு என்பதை உணராதபோதும் அந்தக் குறைந்த அறிவினை நடைமுறையில் கையாளும்போதும் அதன் தீங்கு பயக்கும் விளேவினே அறியலாம். ஆனல், அந்தக் குறைந்த அறிவு நல்ல முறையில் தேர்ந்தெடுக்கப்பெற்றதாக இருப்பின், நிறைந்த பயனை அளித்தல் கூடும் ; அது பலவித மூடப் பழக் கங்களை அகற்றுவதற்குத் துணை புரியக் கூடும். அன்ருட வாழ்வில் நம் உடலைப் போற்றும் முறைகளில் எழக் கூடிய பல்வேறு வினுக்களுக்கு விடையிறுக்கவும் உதவக் கூடும். சாதாரண நிலையிலுள்ள உடலைப்பற்றியும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானல், சாதாரண நிலை” என்பதென்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உடலின் கூறுகள் ஒரு கூட்டு வரிசையிலுள்ள இயந்திரக் கூறுகள் போன்று இணைந்தவை அன்று. செயற்படுங்கால் அவை பல முரண் பட்ட ஆற்றல்களுடன் வளர்ச்சி பெறுகின்றன ; அவற்றின் இறுதி வடிவம், அமைப்பு, கடக்கை ஆகியவை யாவும் குடி வழிச் சாயல்களும் சூழ்நிலைச் சார்புகளும் கலந்த ஒரு பிண்டம் என்றே சொல்ல வேண்டும். எல்லா அம்சங்களிலும் இருவர் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே, சாதாரண கிலையிலுள்ள மனிதன் என்ற பொது உணர்வு என்பது எல்லா வற்றிற்கும் பொதுமையா கவுள்ள உயிரியல் உண்மைகள் யாவும் அடங்கிய கலவை வடிவம் ஆகும். கணித அடிப்படையிலுள்ள அறிவியலைப்போல் உயிரியல் அடிப்படையிலுள்ள அறிவியல் சரியாக இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/10&oldid=865801" இலிருந்து மீள்விக்கப்பட்டது