பக்கம்:மானிட உடல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? ፀ மானிட உடல் கூடியவாறு தூண்டப்பெறக் கூடியவை. இது ஒரு மறிவினை யேயன்றி, சிந்தனையின் விளைவால் நேரிடும் செயல் அன்று. விரலையோ அல்லது சப்பர் போன்றதொரு பொருளையோ சப்புதலால் உண்டாகும் தாண்டலைக்கொண்டே உமிழ்நீர் சுரத்தலை அதிகரிக்கச் செய்யலாம். உமிர்நீர் 99 சதவிகிதத்திற்கு மேல் சோலானது. எஞ்சிய பகுதியில் கரிமமில்லா உப்புக்களும் கரிமப் பொருளும் அடங்கியுள்ளன. கரிமப் பொருளில் மாப்பொருளை உடைக்க வல்ல துரைப் புளியமாகிய உமிழ்நீர் நொதியும் அடங்கியுள் ளது. திடப்பொருள் வடிவத்திலுள்ள உணவு ஆற்றல் வாய்ந்த நாக்கினலும் அாைக்கும் செயலையுடைய பற்களா லும் நன்முக நசுக்கப்பெறுவதால், உமிழ்நீர் மிகச் சிறிய உணவுத் துணுக்குகளுடன் நன்ருகக் கலக்கப்பெற்று உமிழ் நீர் நொதியால் மாப்பொருள் சாதாரண சருக்கரைப் பொரு ளாகச் செரிமானம் செய்யப்பெறுகின்றது. அன்றியும், இரைப்பையிலுள்ள அமிலத்தன்மையுள்ள அகட்டுநீர் உமிழ் நீர் நொதியின் செயலைப் பாதிக்காதவரையில் இச் செயல் இாைப்பையிலும் தொடர்ந்து நடைபெறுகின்றது. உப்புக்கள் உமிழ்நீரின் சுறுசுறுப்புத் தன்மையுள்ள துணைப் பொருள்களாகும். அவற்றுள் பைகார்பனேட்டு என்ற ஒன்று உமிழ்நீர்ச் சாறுகளின் காசத்தன்மை ஒரே மாதிரியாக இருப்பதற்குத் துணைபுரிகின்றது. (ஒரு குறிப் பிட்ட அளவு அமிலத்தன்மை அல்லது காசத்தன்மையிருக் கும்பொழுதுதான் துாைப்புளியம் செயற்படுகின்றது.) கால்சியம் பாஸ்பேட்டு, கால்சியம் கார்பனேட்டு என்ற உப் புக்கள் சில சமயம் பற்களின் மேல் கரிமப் பொருளுடன் சேர்ந்த படிகின்றன ; ஆனல் அவை பயனுள்ள வடிவத்தில் படிவதில்லை. இவ்வாறு படியும் பொருளை நாம் பூற்பாசி அல்லது பற்காாை என்று வழங்குகின்ருேம். இதனை நாம் புருசில்ை தேய்த்தும் சுாண்டியும் பற்களைச் சுத்தமாக்கி விடுகின்ருேம். உணவு பருமனில் குறைக்கப்பெற்று தொண்டைக்குள் கழுவுவதற்கேற்றவாறு நனேக்கப்பெற்றவுடன் விழுங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/100&oldid=865803" இலிருந்து மீள்விக்கப்பட்டது