பக்கம்:மானிட உடல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 83 உணவிலுள்ள அயச் சத்தை விடுவித்து அதனைக் குருதி உறிஞ்சும் நிலைக்கு மாற்றுகின்றது. இம் மாற்றம் குருதி யில் சிவப்பணுக்கள் குறையா திருப்பதற்கு மிகவும் இன்றி யமையாதது. இரைப்பையின் கீழ்ப் பாதியிலுள்ள சுரப்பிகள் வேருெரு துசைப் புளியத்தையும் உற்பத்தி செய்கின்றது. இந்த துரைப் புளியம் உணவிலுள்ள விட்டமின்-பி காம்பி லெக்ஸ் குடும்பத்தைத் சேர்ந்த ஒன்றைத் தாக்கி அது குருதி யால் உறிஞ்சப் பெற்றுக் கல்லீரலில் சேமித்து வைக்கப்பெறும் கிலைக்கு அதனைத் தயாராக்குகின்றது. இந்த விட்டமின், கல்லீரல் குருதிச்சோகை நேரிடாது தடுப்பதற்கு மிகவும் இன்றியமையாதது ; எலும்பு மச்சையில் உடலுக்குகந்த சிவப்புக் குருதியணுக்களே உண்டாக்குவதற்கு இந்த விட்ட மின் தேவைப்படுகின்றது. இவ்வளவு முக்கியமான செயல்களைப் புரிந்து வருவதற் கேற்ற சாறுகளே இரைப்பை சுரக்கும்பொழுது, அதன் ஒரு பகுதியைச் சக்தி சிகிச்சை மூலம் நீக்கிவிட்டால் நாம் எவ்வாறு பிழைப்போம் என்பதை எண்ண எண்ண நாம் வியப்படைகின்ருேம். நடைமுறையில், அமிலத்தைச் சுரக் கும் இரைப்பையின் கீழ்ப் பகுதியின் சுவர் நீக்கப்படு கின்றது; பெரும்பாலும் இது வயிற்றுப் புண், அல்லது சிறு குடலடியில் புண் இருந்தால் அந்தப் புண் ஆறுவதற்குச் செளகர்யமாக இருக்கும்பொருட்டே நீக்கப்படுகின்றது; இாைப்பையில் ஊறும் அமிலம் அப் புண்ணே அதிகமாக்கி விடும். சிறுகுடல் இரைப்பையில் நடைபெறும் செரிமானக் தின் பெரும் பகுதியை மேற்கொள்ளக் கூடியதாக இருப்ப கால், இாைப்பையின் ஒரு பகுதியையோ முழுவதையுமோ நீக்கிவிட முடிகிறது. ஒரளவு மேம்போக்காகச் செரிமானம் ஆன உணவு, திரவ உருவத்தை அடைந்ததும், ஒவ்வொரு தடவைக்கும் சிறு சிறு அளவுகளாக அவ் வுணவு குடல்வாயின் வழியாக வெளியே தள்ளப்படுகின்றது. குடல்வாய் என்பது சுருங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/107&oldid=865817" இலிருந்து மீள்விக்கப்பட்டது