பக்கம்:மானிட உடல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மானிட உடல் வளையம் போன்றதோர் உறுப்பு; அது இசைப் பையின் வெளி யேறும் வாயிலாகவும் சிறுகுடலின் உட்புகும் வாயிலாகவும் உள்ளது. திரவ உருவத்தை அடைந்த உணவு அகட்டுப் பாகு அல்லது இசைப்பைப் பாகு என்று வழங்கப்படும். அதன் ஒரு பகுதி காைசலாகவும் மற்ருெரு பகுதி கூழ்ப்பாலாகவும் இருக்கிறது. அஃதாவது, நுண்ணிய மணிகளாகவுள்ள கொழுப்புப் பொருள் திரவத்தில் சிதறிய நிலையில் இருக் கின்றது. அகட்டுப் பாகு வெளிப்பட்டதும், இசைப்பையில் அங்கு ஊறும் சாறுகளைத் தவிர வேறு ஒன்றும் இராது ; ஒருகால் நம்மால் விழுங்கப்பட்ட காற்றுக் குமிழிகள் இருக் தால் இருக்கலாம். வேதியல் முறையில் உணவு செரிமானம் ஆவதைவிட, இாைப்பையின் தசைகள் சரியான முறையில் சுருங்குவது தான் ஒருவிதத்தில் மிகவும் முக்கியமானதாக வுள்ளது. படபடப்பான பேர்வழிகள் மனவெழுச்சியின் காண மாகவோ மனக் கவலையின் காரணமாகவோ பாதிக்கப் பெறுங்கால் அவர்கள் குடல்வாயில் காம்புப் பிடிப்பு உண்டாகிறது; இதல்ை இாைப்பை காலியாதலில் தாமதம் ஏற்படுகின்றது. அல்லது தாகை ஏற்படும் விரைவான அசைவில்ை, சரியான முறையில் செரிமானம் ஆகாத அகட்டுப் பாகு சிறுகுடலினுள் மிக விரைவாகத் தள்ளப் பெறினும் படலாம். இந்த இரு குறைகளும் வயிற்றுக் துன் பக்திற்குக் காரணமாகின்றன ; இதனுல் தம்மை அதிகமாகக் தொந்தாவு செய்துகொள்ளும் பேர்வழிகளின் வருத்தம் பின்னும் அதிகமாகின்றது. சிறுகுடல் இந்த நீண்ட குழல்வழிப் பாதையில் (படம் - 29.) மூன்று பகுதிகள் உள்ளன. அவை : முன் சிறுகுடல், இடைச் சிறுகுடல், கீழ்ச் சிறுகுடல் என்பவை. இவை மூன்றும் தோற்றத்திலும் செயலிலும் நெருங்கிய தொடர் புள்ளவை. சிறுகுடல்தான் வயிற்றறையின் பெரும் பகுதியை அடைத்துக்கொண் டிருக்கின்றது. அது எளிதில் அசையக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/108&oldid=865819" இலிருந்து மீள்விக்கப்பட்டது