பக்கம்:மானிட உடல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 91 அமினே அமிலங்கள் எனப்படும் எளிய வடிவங்களாக மாறுகின்றன. சிறுகுடலிலுள்ள பி.சிதத்தைக் கரைக்கவல்ல நுரைப் புளியங்களும் பிசிதச் செரிமானத்தின் பிற்பகுதியில் சுறுசுறுப்பாகப் பங்கு கொள்கின்றன. நம் உடலிலுள்ள கணைய நொதிகள் கொழுப்புப் பொரு ளேச் சிதைப்பதற்கு மிகவும் முக்கியமானவை. அவை பல் வேறு கொழுப்புப் பொருளின் பெரும் பகுதியை கிளிசரால், கொழுப்பு அமிலங்கள் என்ற முக்கிய பகுதிப் பொருள்க ளாகப் பிரிக்கின்றன. கொழுப்புப் பொருள் செரித்தலுக் கும் உடலில் உறிஞ்சப்பெறுவதற்கும் பித்தநீர் உப்புக்கள் அணை செய்கின்றன ; அஃதாவது, கொழுப்பை நுண்ணிய மணிகளாக உடைத்து-கூழ்ப் பாலாக்கி-கணேய நொதி யுடன் நன்முறையில் சேர்வதற்குத் துணைபுரிகின்றன. மாப்பொருளே உடைக்கும் அமிலேஸ் என்ற நொதி யும், செயலில் டயலின் என்ற உமிழ்நீர் நொதியைப் போன் றதே ஆனல், அதைவிட மிகவும் சுறுசுறுப்பானது. ஆயினும், கணையம் சத்திரச் சிகிச்சை மூலம் அகற்றப் பெற்ருலும், கணையக் அம்பில் ஏதாவது தடை ஏற்பட்டா லும், சிறுகுடவில் செரிமானம் தொடர்ந்து நடைபெறக் கூடும். காரணம், சிறுகுடல் சுரப்பிகளிலும் கணையத்திலுள்ள துரைப் புளியங்களைப் போன்ற நசைப் புளியங்கள் உள்ளன. சில சமயம், கணையத்தை அகற்றப்பெற்ற ஒருவர் சில கணைய துாைப் புளியங்களே ஈடுசெய்வதற்காகக் கணையச் சாரத்தை உட்கொள்வது இன்றியமையாததாகவும் இருக்கும். செரிமானம் ஆன பொருள்கள் குருதியில் உறிஞ்சப் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றன. இடைச் சிறுகுட லும் கீழ்ச் சிறுகுடலும் அடங்கிய சுமார் 24 அடி நீளமுள்ள சிறுகுடலால் அவை சகா முன்நோக்கிக் கள்ளப்பெற்றுக் கொண்டே யிருப்பதால் இது சாக்கியமாகின்றது. இக் குடல் வயிற்றின் வலப்புறக் கீழ்ப் பகுதியில் பெருங்குடலுடன் சேரும்வரையிலும் பல வளையங்களாகச் சுருண்டு கிடக் கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/115&oldid=865833" இலிருந்து மீள்விக்கப்பட்டது