பக்கம்:மானிட உடல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 மானிட உடல் சிறுகுடலின் உட்புறத்தில் காணப்பெறும் குடல் உறிஞ்சிகள் மூலம் உணவுச் சத்துக்கள் உறிஞ்சப் பெறு கின்றன. நுரையீரலில் வாயு உறிஞ்சப் பெறுவதுபோலவே, இங்கும் உறிஞ்சும் கிரியை நடைபெறுகின்றது. சிறுகுடலி லுள்ள ஒவ்வொரு பொருளின் அடர்வும் குருதியிலும் கிண நீரிலும் உள்ள அவற்றின் அடர்வைவிட அதிகமாக இருப்ப கால் குருதிக்குள்ளும் நிணநீர்க்குள்ளும் ஒரே வழிப்போக்கு கடைபெறுகின்றது. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, மிக எளிய முறையில் செரிமானம் ஆன பொருள்கள் மட்டிலும் குருதிக்குள்ளோ நிணநீரினுள்ளோ அனுமதிக்கப் பெறு கின்றன. பிசிகங்கள் அமினுே அமிலங்களாகவும், கொழுப்புப் பொருள்கள் கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரால், மாப் பொருள் போன்றவை சாதாரண சருக்கரை வகைகளாகவும் துழைகின்றன. இவற்றுள் சில வடிகுழல்களினுள்ளும் கல்லிால் நாளத்தினுள்ளும் விரைவாகச் செலுத்தப் பெறு கின்றன ; இதல்ை சிறுகுடலே வடிந்துவிடுகின்றது. கொழுப்பு அமிலங்கள் நீரில் கரையாவாதலின் அவை நிணநீர்க் குழல்களின் வழியாக உறிஞ்சப்பெறுதல் இன்றி யமையாததாகின்றது. அவை சிறு குடலில் பித்தநீர் உப்புக்க ளுடன் சேர்வதால் சிறுகுடல் சுவர்களின் வழியாகச் செல் அம் ஆற்றலேப் பெறுகின்றன என்றும், அங்கு அவை மீண்டும் கிளிசராலுடன் சேர்ந்து நிணநீரினுள் ஏற்றுக் கொள்ளப்பெறுகின்றன என்றும் கருதப் பெறுகின்றன. நல்ல கொழுப்புள்ள உண்டியை அருந்திய பிறகு, சிறுகுடல் சுவரை நோக்கினுல் கொழுப்புச் சத்துக்கள் நிரம்பிய கிண நீர்க் குழல்கள் வெண்மையான கயிறுகளைப்போல் தென் படுவது தெரியும். எல்லாவித உறிஞ்சுதலையும் பெளதிக - வேதியல் விதி களேக் கொண்டே விளக்க முடியாது. சிறுகுடலின் அணேச் சவ்வுகளிலுள்ள உயிரணுக்கள் பொருள்களைத் தேர்ந்தெடுப் பதில் மிகச் சுறுசுறுப்பாகப் பங்குகொள்ளும் கிறனைப் பெற் அறுள்ளன. பழவெல்லம், வேறு சருக்கசை வகைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/116&oldid=865837" இலிருந்து மீள்விக்கப்பட்டது