பக்கம்:மானிட உடல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 93. போன்ற சாதாரண சருக்கசைகள் யாவும் அணைச் சவ்வு இறுக்கமாக உள்ளவரையிலும் ஒரே வேகத்தில் உறிஞ்சப் பெரு. இந்த முறையில் சிறுகுடல் அணேச் சவ்விலுள்ள உயிரணுக்கள் சிறுநீரகச் சிறு குழல்களிலுள்ள அணைச் சவ்விலுள்ள உயிரனுக்களே ஒத்திருக்கின்றன. அவை யாவும் செயலற்ற நிலையிலுள்ள வடிகட்டிகள் மட்டிலு மல்ல; அவை தேர்ந்தெடுத்த உறிஞ்சுகலின் வேலையையும் ஆற்றுகின்றன. குடல் உறிஞ்சிகள் மூலமும் பெருங் குடலிலும் நீர் உறிஞ்சப் பெறுகின்றது. உடலின் நீருடைமையைப் பொருட் படுத்தாது நீர் உறிஞ்சப் பெறுதல் சற்று கவர்ச்சிகா மாகவே உள்ளது. சிறுகுடலின் பாய்மம் சுரப்பு நீர்கள் வடிவத்தில் தள்ளப்பெறுவதால், அதிலுள்ள பொருள்கள் யாவும் பெருங்குடலே அடையும்வரை திரவமாகவே இருக்கும். கரிமமில்லா உப்புக்கள் அனைச் சவ்வின் உயிரணுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையில் உறிஞ்சப் பெறுகின் றன. விட்டமின் D-யின் இருப்பிற்கேற்றவாறு எலும்பில் போய்ச் சேருகின்ற கால்சியமும் பாஸ்வாமும் உறிஞ்சப் பெறும் வேகம் மாறுபடுகின்றது. அயமும் கரிமமில்லா வடி வத்தில்தான் உறிஞ்சப் பெறுகின்றது ; காரணம், குருதியி லுள்ள அயத்தைப்போல் சேர்மானமுள்ள அயமும் கிடைப்ப தில்லை. குளோரைடு உப்புக்கள் காாாளமாக ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றன. சல்பேட் உப்புக்கள் ஏற்றுக் கொள்ளப் பெறுவதில்லை ; அதனல்தான் அவை பேதியின் விளைவைப் பெற்றுள்ளன ; அவை நீரை ஈர்த்து மலத்தை திரவ வடிவமாக்குகின்றன. கால்சியம், பாஸ்வாம், மெக்னி சியம், அயம் ஆகியவை போன்றவற்றின் அயனிகள் குடல் வழியாக வெளியேற்றப் பெறுகின்றன ; வெளியேற்றப் பெற்ற பொருளில் அவற்றின் இருப்பைக் காணலாம். பெருங்குடல் பெருங்குடல் சிறுகுடலைப் போல் இரண்டு மடங்கு பருமன் உள்ளது (படம் 33). ஆனல், அதன் சுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/117&oldid=865838" இலிருந்து மீள்விக்கப்பட்டது