பக்கம்:மானிட உடல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விரல் 99 ஆகியவற்றிலிருந்து கிளம்பி, நோாகக் கல்லீரலை அடையும் சிறு அமைப்பாகும். உடலிலுள்ள வேறு எல்லா நாளக் குருதியும் பெருவடி குழல்களின் மூலம் இதயத்தின் வலப் புறத்திற்குத் திரும்ப வருகின்றது. கல்விால் குருதி, சிறுகுட லில் உறிஞ்சப்பெறும் செரிமானச் சத்துக்களையும், மண்ணிா லில் குருதி முறிதலில் பெறும் அயக்கையும் ஏற்றுக் கொண்டு வந்து ஏராளமான வளர் சிதை மாற்றப் பொருள் களாகக் கல்லீரலுக்குத் தருகின்றது : கல்லீரல் அவற்றை ஒன்ருகத் தொகுத்தும், பங்கப்படுக்கியும், சேமித்து வைக் தும் பல்வேறு செயல்களைப் புரிகின்றது. ஆனல், இந்தக் குருதி தாளக் குருதி ; இது தேவையான அளவு உயிரியக் தைப் பெற்றிருக்கவில்லை. ஆகவே, இது பெருநாடியி லிருந்து பாய்ந்துவரும் குருதியுடன் கல்விால் நாடிமூலம் சேர்க்கப் பெறுதல் வேண்டும். இந்தக் குருதிப் பெருங் குழல்கள்-கல்லீரல் நாளமும் கல்விால் காடியும்-ஒன்றுக் கொன்று மிக அருகில் கல்லீரலின் வழியாகப் பிரிந்து செல்லு கின்றன. ஆணுல், அவை மிக நுட்பமான கிளைகளாகப் பிரிந்து செல்லும்பொழுது அவற்றின் இரண்டு விதமான குருதிகளும் கலக்கின்றன. இவ்வாறு இறுதியாகச் செயற் படும் பகுதி, அஃதாவது கல்லீரலின் உயிரணுக்கள் அடங் கிய நாண், மிக நுட்பமான சுவரைக்கொண்ட உள்ளறைப் பகுதியின்மீது பாவுகின்றது ; இந்த உள்ளறைதான் உடலி லேயே அதிகமான குருதியைக் கொண்டிருக்கின்றது. இந்த உள்ளறைப் பகுதிகளும் கல்விால் நாண்களும் ஒன்றுதிாண்டு நடு சிறு ஈ. லிதழ் நாளத்தை நோக்கிக் குவித்து திரளுகின் றன. இந்த ஈரலிதழ் நாளந்தான் செயற்படும் குழுவின் நடுநாயகமாக விளங்குகின்றது; இது சிறு ஈரலிதழ் என்று வழங்கப் பெறும். மானிடக் கல்லீரலிலுள்ள ஒரு சிறு ஈரலிதழ் ஒரு குண்டுசியின் தலையளவு பருமனுள்ளது. அதன் சுற்றளவு எப்படி யிருக்கிற தென நிச்சயிக்கப்பெறவில்லை ; அவை அண்மையிலுள்ள சிறு சாலிகழ்களின் எல்லைகளுடன் ஒன்றிவிடுகின்றன.

  • Sinus.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/123&oldid=865852" இலிருந்து மீள்விக்கப்பட்டது