பக்கம்:மானிட உடல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மானிட உடல் குருதி, நடுநாயகமாக விளங்கும் சிறு ஈரலிதழ் நாளங் களிலிருந்து பிரதம கல்லீரல் நாளங்களில் வடிகின்றது. இக் கல்லீரல் நாளங்கள் கீழ்ப்பெரு வடிகுழலாக ஒன்று திரள் கின்றன. இதுதான் வயிற்றுப் பகுதியிலிருந்து இதயத்தின் வலப் புறத்திற்கு வரும் பெருங்குழல். கல்லீரலின் பெருங் குழற் படுக்கைப் பகுதி விரிந்து ஏராளமான குருகியைக் கொள்ளக் கூடியது. இதயத்தில் செயற்படா நிலை ஏற்படுங் கால் அதிகமான குருதி நெருக்கடியாகவுள்ள கல்லீரலில் பாய்ந்து அதன் பருமனப் பெரிதாக்குகின்றது. இதனுல் தான் மருத்துவர்கள் கீழ் விலாவெலும்புகளே யொட்டியுள்ள கல்லீரலின் கீழ் விளிம்பைத் தொட்டு உணர்கின்றனர். அது இருக்கும் நிலையிலிருந்து ஒரளவு அதன் பருமனே நிர்ண யிக்கக் கூடும். கல்லீரல் உடல் ஊட்டத்தில் பெரும் பங்குகொண்டிருக் கின்றது. குருதியிலுள்ள ஆல்புமென் எனப்படும் முட்டை யின் வெண்கருச் சத்தை உற்பத்தி செய்வதற்குக் கல்லீரல் தான் பெருங் காரணமாக வுள்ளது. கல்விால்தான் உட லுள்ள மாப்பொருளே கிளைக்கோஜன் என்ற குருதிச் சருக்கரையின் முன்னுேடியாக மாற்றித் தன்னிடத்திலேயே சேமித்து வைத்துக்கொள்ளுகின்றது. உடலுக்குத் தேவைப் படுங்கால், கல்விால் அங்கச் சருக்கரையைப் பழச் சருக்கரை யாக மாற்றிவிடுகின்றது. அன்றியும், கல்லீரல் சதா கொழுப் புச் சத்துக்களே ஒரு வடிவத்தில் ஏற்றுப் பிறிதொரு வடி வத்தில் உடலெங்கு முள்ள பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டே யிருக்கின்றது. குருதி உறைதலிலும் கல்லீரல் தொடர்பு கொண்டுள் ளது. உறை நிணநீரின் முன்னேடியாகவுள்ள நிணநீரகம் எனப்படும் நீர்குருதிப் பிசிகக்கைக் கல்லீரல்தர்ன் பெரிய அளவில் உற்பக்தி செய்கின்றது. அன்றியும், உறைதலில் பங்குகொள்ளும் புரோத்ரோம்பின் எனப்படும் இன்னுெரு பிகிதத்தையும் உற்பத்தி செய்யும் பெருமூலமாகவும் கல்லீரல்

  • Precursor.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/124&oldid=865854" இலிருந்து மீள்விக்கப்பட்டது