பக்கம்:மானிட உடல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விரல் 103 லிபிட்ஸ் லெசிதின், கோலஸ்டெரால் என்ற பொருள் கள் உள்ளன. பைலிரூபின் என்ற ஒருவித பித்தநீர் நிறமி போன்ற நிறமிகள் குருதி நிறமி சிதைதலால் உண் டாகுபவை; குருதி நிறமி என்பது சிவப்பு உயிரணுவிலுள்ள நிறமி யாகும். உடலில் இணைக்கும் இழையங்களிலுள்ள பிரத்தியேகமான உயிரணுக்கள்-செடிகுலோ எண்டோதீலி யல் உயிரணுக்கள்-இச் சிதைவை உண்டாக்குகின்றன. அவை மண்ணிசலிலும் எலும்பு மச்சையிலும் பிரத்தியேக மான சுறுசுறுப்பைப் பெற்றுள்ளன. பைலிரூபின் கல் விரலிலுள்ள குருதிக்குக் கொண்டுபோகப் பெறுகின்றது : அங்கிருந்து சிறுகுடலினுள் கழிக்கப்பெறுகின்றது. கல்விால் உயிரணுக்களால் பித்தநீர் உப்புக்கள் உற்பத்தி செய்யப்பெறுகின்றன. இவ் வுப்புக்கள் சிறுகுடல் பாதையில் கொழுப்புப் பொருள்களின் செரிமானத்திற்கும் கொழுப்புப் பொருள்களும் கொழுப்புப் பொருள்களைக் கரைக்கும் A, b, K விட்டமின் சக்துக்களும் உறிஞ்சப்பெறுவதற்கும் பெருந் துணை புரிகின்றன. அவை சிறுகுடல் பாகையில் மேற் பரப்பு இழுவிசையைக் குறைக்கின்றன; இதல்ை கொழுப்புத் துளிகள் துட்பமான கூழ்ப்பாலாக அமைகின்றன. அங்க உப்புக்கள் மீண்டும் குருதியில் உறிஞ்சப்பெற்றுக் கிரும்பவும் கல்லீரலுக்கு அனுப்பப்பெறுகின்றன ; அங்கு அவை இன் னும் அதிகமான பிக்கைேச உற்பத்தி செய்யத் தாண்டுகின் றன. பி.சிதம் அல்லது கொழுப்பு அதிகமாகவுள்ள உணவு பித்தநீர் உப்பு உண்டாவதை அதிகரிக்கச் செய்கின்றது ; இதனுல் பித்தநீரின் அளவும் அதிகரிக்கின்றது. மாப் பொருள்கள் இதற்கு நேர் எதிரான பலனை விளைவிக்கின்றன. பித்தநீரில் காணப்பெறும் கோலெஸ்டாால் என்ற பொருள் உணவுகளிலிருந்து கிடைக்கின்றது ; ஆல்ை, அது உடலெங்கும் உற்பத்தி செய்யவும்பெறுகின்றது. கோலெஸ் டாால் என்ற பொருள் உடலிலிருந்து பித்தநீர் மூலமாக மட்டிலும் அகற்றப் பெறுவதில்லை. அதில் ஒரு பகுதி சிதைக் கப் பெறுகின்றது : ஒரு பகுதி தாய்ப்பாலில் காணப்படு கிறது, அல்லது தோலின் மூலம் இழக்கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/127&oldid=865860" இலிருந்து மீள்விக்கப்பட்டது