பக்கம்:மானிட உடல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சிறுநீர் மண்டலம் சிது நீரகங்கள் இாண்டு சிறு நீரகங்களும் (புகைப் ப்டம் க, கங்-ஐப் பார்க்க.) வபையறையின் பின்னுல் முதுகந்தண்டை யொட்டி வயிற்றின் மேற்கோடிப் பகுதியில் அமைந்திருக்கின்றன. இதலை இவை வபையறையினுள் அமைந்துள்ள குடல்கள், கல்லீரல் ஆகியவற்றிடமிருந்து பிரிக்கப் பெற்றுள்ளன என் 4.3.jū தெளிவாகின்றது. சிறுநீரகங்களை உறுதியாக இருக்கு மிடத்திலேயே நிலைநிறுத்தும் கசையிலிருந்தும் இணைக்கும் இழையக்கிலிருந்தும் பிரித்து வைக்கும் முழு உறையைச் சிறுநீரகங்கள் பெற்றுள்ளன. வலது சிறுநீரகம் ஒரளவு கல்லீரலின் பின்புறம் அமைந்துள்ளது. அதன் மேற் கோடியையொட்டி உட்புறமாக ஒரு மாங்காய் சுரப்பி ஒரளவு முன் சிறுகுடலின் அருகிலும் பெருங்குடலின் அருகிலுமாக அமைந்துள்ளது. இடது சிறுநீரகம் சற்று உயரமான நிலையி லிருக்கிறது. அவ்வாறு இருப்பதற்குக் காரணம் அதன் வழியில் பெரிய கல்லீரல் இல்லாதிருப்பதே யாகும். அது? உதாவிதானத்திற்குச் சற்று கீழாக இருந்தபோதிலும், பின்புறத்திலுள்ள இரண்டு கீழ்விலாவெலும்புகளுடன் ஒரே மட்டக்தில் இருக்கிறது. இந்தச் சிறுநீரகம்கூட மாங்காய்ச் சுரப்பியை யொட்டியும் மண்ணிால், கணையத்தின் வால்பகுகி, இரைப்பை, பெருங்குடலின் ஒரு பகுதி ஆகியவற்றின் அருகிலுமாக அமைந்திருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/130&oldid=865868" இலிருந்து மீள்விக்கப்பட்டது