பக்கம்:மானிட உடல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மானிட உடல் ேைலா ஏற்படும் மாறுபாடுகளும் நடைபெற்றபோதிலும், சிறுநீரகங்களின் செயலால் குருதியின் பரிமாணமும் அதி அள்ள பல்வேறு பகுதிப் பொருள்களின் அளவும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. வெளியில் சுற்றுவதும் ஒழுங்குபடுத்துவதுமான முக்கிய அலுவல்களே நிறை வேற்றுவதற்காக அளவில் குறையாத ஏராளமான குருதி யையும், ஏராளமான வடிகட்டும் பாப்பிடங்களையும், மிகச் சிறிய குழல்களையும் சிறுநீரகங்கள் பெற்றிருத்தல் வேண்டும். சிறுகுழல்களில்தான் வடிகட்டப்பெற்ற நீர்க் குருதி (பிளாஸ்மா) சிறுநீராக மாற்றப் பெறுகின்றது. சிறுநீரங்களுக்குக் குருதியை அனுப்பும் பிரதம பாய் குழல்கள் பெருநாடியிலிருந்து நோகப் பிரிந்து செல்லும் பெரிய அமைப்புக்களாகும். அப் பிரதம பாய்குழல்கள் எண் ணற்ற நுட்பமான சிறு குழல்களாகப் பிரிந்து, சிறுநீரகங்களி அள்ள பாய்குழல் அமைப்பு ஒரு அடக்கமான புகர்போல் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் கிட்டத்தட்ட ஆயிரக்கிருநூறு கன சென்டி மீட்டர் அளவுள்ள குருதி சிறு சேகங்களினுள் பாய்ந்து செல்லுகின்றது. இந்த அளவு குருதி இதயத்திலுள்ள மொத்தக் குருதியில் கிட்டத்தட்ட கால் பகுதி யாகும் ; சில சமயம் இவ்வாறு குருதி பாய்ந் தோடுவது இன்னும் அதிகமாகவும் இருக்தல் கூடும். சிறுநீரகத்தின் செயற்படும் பகுதி நெருங்கப் பிணைந்த, கொளேயுள்ள கயிறு போன்ற அமைப்புக்களாலானது : அவற்றை நெப்ரான்கள் என்று வழங்குவர் (படம் 36). ஒவ்வொரு சிறுநீரகத்திலும் கிட்டத்தட்ட பத்திலிருந்து பதினேந்து இலட்சம்வரை (ஒன்றிலிருந்து ஒன்றரை மிலியன் வரை) அந்தவித அமைப்புக்கள் இருக்கின்றன என்று மதிப் பிடப் பெற்றிருக்கின்றது ; நமக்குக் கேவையாகவுள்ளதற்கு மேல் அவை அதிகமாகவே யுள்ளன. ஏதாவது சில நோய் களால் சில நெப்ரான்கள் சிறிது சிறிதாகக் கெட்டுப் போயி னும், அதனுல் தீங்கு ஒன்றுமில்லாம லிருப்பதற்கு இந்தப் பெரிய எண்ணிக்கை துணை செய்கிறது. உண்மையில், ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/132&oldid=865872" இலிருந்து மீள்விக்கப்பட்டது