பக்கம்:மானிட உடல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í Í 0 மானிட உடல் முடிச்சு என்று வழங்குவர். அது ஊனக் கண்ணுக்கே நன்ருகத் தென்படும். அம் முடிச்சு பல கண்ணிகளாக அமைந்த நுட்பமான துண்புழைகளாலானது , அந்த துண் புழைகள் யாவும் ஒரு சிறு பாய்குழலிலிருந்து உண்டானவை; இச்சிறு பாய்குழல் இரட்டை அடுக்குச் சவ்வில்ை மூடப் பெற்றுள்ளது. சவ்வின் ஒர் அடுக்கு குருதிக் குழல்களே நெருக்கமாகப் போர்த்திக்கொண் டிருக்கிறது. மற்ருென்று நீண்ட, கயிறுபோன்ற நெப்ரானின் தொடர்ந்த பகுதியாகும்; இதைச் சிறுகுழல்’ என்று வழங்குவர். இரண்டு அடுக்கு களுக்கும் இடையேயுள்ள இடம் சிறுநீரக முடிச்சு இடம் 3. என்று வழங்கப் பெறும் ; இந்த இடம் நேராகத் தொளேயாக வுள்ள சிறுகுழலை யடைகின்றது. கைமுட்டியை இலேசாக உப்பச் செய்த பலூன் ஒன்றினுள் செலுத்தியிருப்பதைக் கற்பனை செய்துகொண்டால் சிறுநீரக முடிச்சின் அமைப் பினத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். கைமுட்டிலுள்ள விரல்கள் கிட்டத்தட்ட கண்ணிகள் போன்றுள்ள துண் புழைகளாகும். பலூனின் சுவர்கள் சிறுநீரக முடிச்சின் இரட்டை உறையை யொத்துள்ளன ; அவற்றுள் ஒன்று முட்டியை அமுக்கிக் கொண்டுள்ளது. பலுரனின் உள்ளுறை சிறுநீரக முடிச்சின் இடத்தைக் குறிக்கின்றது ; பலூனின் கழுத்த சிறுகுழலின் முதற் பகுதியைக் குறிக்கின்றது. குருதி நுட்பமான சிறுநீரக முடிச்சிலுள்ள துண் புழைகளில் சுற்றி வருங்கால், பிகிதத்தைத் தவிர பாய்மவடிவி லுள்ள நீர்க்குருதியும் ஏனய பொருள்களும் சிறுநீரக முடிச்சின் இடத்திற்குள் வடிகட்டப்பெறுகின்றன. (நடை முறையிலுள்ள நீர்க்குருதிப் பிசிதம் பருமனில் பெரிதாக இருப்பதால், ஒடுக்கமாகவுள்ள நுண்புழைச் சுவரின் வழியாக நுழைந்து செல்வது தடுக்கப்பெறுகின்றது). சிறுசேக முடிச் சின் இடத்திலும் சிறுகுழலிலும் உள்ள அமுக்கத்துடன் ஒப் பிடும்பொழுது குருதியோட்டத்தின் அமுக்கம் அதிகமாக இருக்கின்றது; இந்த அமுக்க வேற்றுமையின் காரணமாகவே

  • Tubule,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/134&oldid=865876" இலிருந்து மீள்விக்கப்பட்டது