பக்கம்:மானிட உடல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll 4 மானிட உடல் படம் 37. சிறுநீர்க் குழல்கள் (கருமையான இடத்தால் காட்டப் பெற்றுள்ளவை.) 1. சிறுநீரகங்கள் 2. சிறுநீர்ப் பை 3. சிறுநீர்ப் புறவழி. சிறுநீர்ப் பை என்பது (புகைப்படம் கங்-ஐப் பார்க்க ; படம் 38) மூடிய நிலையிலுள்ள ஒரு பை. அதன் கழுத்து போன்ற அடிப்பகுதியில் சிறுநீர்க் குழல்கள் சிறுநீரைக் காலி செய்கின்றன. சிறுநீர்ப் பை என்ற இந்த உறுப்பு குறிப் பிட்ட காலத்தில் சிறுநீரை விடுவிப்பதற்காக அதனைச் சேமித்து வைக்கின்றது. அது கொண்டிருக்கும் சிறுரிேன் அளவுக்கேற்றவாறு அது தன் நிலையினையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. சாதாரணமாக அது முழுவதும் இடுப்பெலும்புக் குழியில் அமைந்திருக்கின்றது ; இடுப்பெலும்புக் குழியிலுள் எலும்புப் பகுதியையொட்டி முன்புறமாக நடுவிடத்தில் அமைந்துள்ளது. (புகைப் படம் கச-ஐப் பார்க்க.) பெண்ணிடம் இந்தச் சிறு நீர்ப்பை எலும் பிற்கும் கருப்புைக்கும் இடையே பின்புறமாகவும் மேற்புற மாகவும் அமைந்திருக்கின்றது. ஆணிடம் சிறுநீர்ப் பைக்கும் மலக்குடலுக்கும் இடையே சுக்கில மூல சிறு கொப்புள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/138&oldid=865884" இலிருந்து மீள்விக்கப்பட்டது