பக்கம்:மானிட உடல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீர் மண்டலம் 115 படம் 88. சிறுநீர்ப் பை (கருமை யான இடத்தால் காட்டப் பெற்றுள்ளது.) 1. சிறுநீரகங்கள் 2. சிறுநீர்க் குழல்கள் 3. சிறுநீர்ப் புறவழி. அமைப்புக்கள் மட்டிலுமே அமைந்துள்ளன. வயிற்றினுள் இவற்றை யெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் வபை என்ற சவ்வு சிறுநீர்ப் பையின் முகட்டினை யொட்டி யுள்ளது ; எனவே, சிறுநீர்ப் பை சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழல்கள், வேறுசில இடுப்பறை உறுப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வபையறையின் வெளியே அமைந்திருக்கின்றது. சிறுநீர்ப்பை காலியாக உள்ளபொழுது அது மேற்புறத் தில் மட்டமாக அல்லது குவிந்து முன்புறமாகச் சாய்ந்து இருக்கும். அது முழுவதும் நிரம்பி யிருக்கும்பொழுது, உருண்டு மேற்புறம் அதைப்பாக இருக்கும். அது குடல் தசையைப்போல் மிருதுவான, ஆனல் அதைவிட பருமனை, தசையினலானது. அதன் மிருதுவான அனைச் சவ்வில் சளி உண்டாவதில்லை. ஆனல் அச் சவ்வு பல உயி ானுக்கள் ஆழத்தில் அழுத்தமான எபிதீலிய ஏட்டினல் ஆனது. சிறுநீர்க் குழல்களின் வளைந்த நுழைவாயிலைச் சுற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/139&oldid=865886" இலிருந்து மீள்விக்கப்பட்டது