பக்கம்:மானிட உடல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மானிட உடல் தசை சிறுநீர் அலேபோல் மேல்நோக்கிச் செல்லாதிருக்கும் பொருட்டு மிக இறுக்கமான நிலையில் அமைந்திருக்கின்றது. சிறுநீர்ப் புறவழி ஒரு குழல்போன்ற பாதையாகும் : அது சிறுநீரை சிறுநீர்ப் பையிலிருந்து வெளிவரையிலும் கொண்டு செலுத்துகிறது. அது சிறுநீர்ப் பையின் கீழ்ப்பகுதி யில் அதனை விட்டுப் பிரிந்து சிறுநீர்க் குழல்களின் திறப்புக் களுடன் சேர்ந்து சிறுநீர்ப்பையின் கழுத்தருகியில் ஒரு முக் கோணத்தை அமைக்கின்றது. ஆணிடம் புராஸ்டேட் இழை யத்தின் முகடு சிறுநீர்ப் பையின் இம்முக்கோணப் பகுதியை யொட்டி அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஏழிலிருந்து எட்டு அங்குல நீளம் இருக் கக் கூடிய ஆணின் சிறுநீர்ப் புறவழி ஆங்கில எழுத்தாகிய S-ஐப் போன்று வளைவாகவுள்ளது ; இந்த வளைவுக்குழல் சிறு நீர்ப்பையின் கழுத்திலிருந்து புராஸ்டேட் சுரப்பியின் வழி யாக முன் இடுப்பெலும்பின் கீழாக ஆண்குறியின் துனிவரை யிலும் வருகிறது. (புகைப்படம் கச-ஐப் பார்க்க : படம்-39.) அது சுக்கிலத்தையும் சிறுநீரையும் வெளிப்படுத்துவதால், வெளியேற்றும் தாம்புகள் அகில் வந்து காலியாகுமாறு அமைந்துள்ளன; சிறுநீர்ப் புறவழி புராஸ்டேட் சுரப்பி வழி யாக வருவதால் இது சாத்தியமாகின்றது. பெண்ணின் சிறுநீர்ப் புறவழி குட்டையானது; அதன் நீளம் கிட்டத்தட்ட ஒன்றிலிருந்து ஒன்றரை அங்குலத்தான் இருக்கும். அது பெண்குறியின் வெளிப்புறத்திற்கருகில், யோனிக்குழாயின் வெளிவாயிலின் முன்புறமாகத் திறக்கின் றது. (புகைப் படம் கச-ஐப் பார்க்க.) ஆண் சிறுநீர்ப் புற வழியும் பெண்சிறுநீர்ப் புறவழியும் சிறுநீர்ப் பையிலுள்ளது போலவே எபிதீலிய அனைச் சவ்வினுல் போர்த்தப்பெற் அள்ளன ; அங்கு ஒரு மெல்லிய தசைச் சுவரும் உள்ளது. சிறுநீர்ப் போக்கு குழந்தையிடம் சிறுநீர்ப் போக்கு முழுவதும் ஒரு மறி வினையாக வுள்ளது. ஒரு குறுகிய காலத்திற்குள் அச்செயல்

  • Ridge.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/140&oldid=865890" இலிருந்து மீள்விக்கப்பட்டது