பக்கம்:மானிட உடல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மானிட உடல் பை நிரம்பியதும் தசையாலான சுவர் ஒருவித அமுக்கத்தைத் தருகின்றது. கிட்டத்தட்ட ஒரு கோப்பையளவு சிறுநீர் சேர்ந்ததும், பொறியுணர்ச்சி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொடுக்கின்றது. உடனே அந்த நபர் விருப் பப்படி சிறுநீர்ப் புறவழியின் வெளிப்புறமாகவுள்ள வட்ட மான சுருக்குத் தசையாலான மூடியை நெகிழவிடுகின்ருர் ; இது சிறுநீர்ப் புறவழியின் கீழ்ப்பகுதியிலுள்ள இயக்குதசை யாலான முடியாகும். உட்புறமாகவுள்ள வட்டமான சுருக் குத் தசைமூடி உடனே ஒரு மறிவினபோல் நெகிழ்கிறது ; இது இயங்கு தசையாலானது; சிறுநீர்ப் பையின் தசை சிறு நீர்ப்புறவழிப் பக்கமாகச் சுருங்குவதால் அதன் செயல் நடை பெறுகின்றது. சிறுநீர்ப் பையின் தசைச்சுருக்கம் நெகிழ்ந்த நிலையிலுள்ள வழியாக சிறுநீரை வெளியேற்றுகின்றது. சிறு நீர்ப் புறவழியில் இறுதியாகவுள்ள சிறுநீர் ஆண்குறியின் காம்பிலுள்ள தசைச் சுருக்கத்தால் காலியாகிறது ; பெண் குறியின் யோனிக்குழலில் வெளிப்புறத்திற்கருகிலுள்ள தசைச் சுருக்கத்தால் காலியாகிறது. புல நரம்பினுடையதும் செய்கை நாம்பினுடையதுமான கேடுருத நாம்புச் செயல் மிகவும் முக்கியமானது. முதுகக் தண்டில் நேரிடும் தீங்குகள் அல்லது இடுப்பறை உறுப்புக் களுக்கு உண்டாகும் நோய்கள், சிறுநீர்ப் பாதை சம்பந்தப் படாவிட்டாலும், சிறுநீர்க் கட்டுப்பாட்டைப் பாதிக்கச் செய்யும். அச்சம்கூட கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் ; சிறுநீர்ப் பாதைக் கட்டுப்பாட்டின் இயக்க நிலை மிக நுட்ப LÐff GMT357. சிறுநீரைச் சாதாரணமாகப் பரிசோதித்தே மருத்து வர்கள் சிறுநீரகங்களின் செயலைப்பற்றி அதிகமாகச் சொல்லி விடுவார்கள். அதில் பிசிதம் காணப்பட்டால், சிறுநீரக முடிச்சு அதனை வெளிவிட்டுக்கொண் டிருக்கிறது. அதில் சருக்கரை காணப்பெறின், அதில் அதிக சருக்கசைப் பொருள் இருப்பதைப் பிரதிபலிக்கின்றது. சிறுநீர் அதிக நீர்த்த நிலையி லிருந்தால் (செறிவு எண் தாழ்ந்திருந்தால்) சிறுநீரக முடிச்சி யின் மூலம் வடிகட்டப் பெறும் பாய்மத்தின் அளவிற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/142&oldid=865894" இலிருந்து மீள்விக்கப்பட்டது