பக்கம்:மானிட உடல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் சிதை மாற்றம் 123 பட்டு நடைபெறுங்கால், முடிவாகக் கானும் எண் அடிப் படை வளர்சிதை மாற்ற வேகம் என்று வழங்கப் பெறும், இதில் ஏற்றுக்கொள்ளப் பெற்ற உயிரியத்தின் அளவு வெளி யிடப்பெற்ற சூட்டின் அளவிற்கு விகிதப் பொருத்தத்தி லிருப்பதால், ஒரு நிமிடத்தில் செலவான உயிரியத்தின் அளவு கிர்ணயிக்கப் பெறும் , ஆறிலிருந்து எட்டு நிமிடத்திற்கு இது நிர்ணயிக்கப்பெற்று அதிலிருந்து ஒரு கிடத்திற்குக் கணக்கிடப் பெறும். இந்த உயிரிய அளவிலிருந்து, வெளி யிடப் பெற்ற சூட்டின் அளவைக் கணக்கிட வேண்டும். இந்த வேகத்தை உடலின் பாப்பினுடன் பொருக்திப் பார்க் கும்பொழுது, அடிப்படை வளர்சிதை மாற்ற வேகம் நிர்ண யிக்கப் பெறுகின்றது. பிரத்தியேகமாக அமைக்கப் பெற் அள்ள ஒரு சிறு குளத்தில் ஒரு நபரை இருக்கச் செய்து கோடியாகச் சூடு உண்டாக்கும் வேகத்தை அளத்தல் கூடும். கோல்லாததாக இருப்பினும், உயிரிய முறைதான் மிகவும் எளிதானது. ஆற்றல் உண்டாதலில் பழச் சருக்கரை மட்டிலுந்தான் பயன்படுகிறது என்று நினைக்கல் தவறு. பழச் சருக்கரை போன்ற கூட்டுப் பொ ருள்கள், அமினே அமிலங்கள், கொழுப்புப் பொருள்கள் ஆகியவற்றையும் ஆற்றலையுண் டாக்கவல்ல தசைப் புளியங்களால் காக்குறும்படிச் செய்து ATP-யை உற்பத்திசெய்யலாம். நாம் உண்னும் உணவு மட்டி லும் நேரடியான ஆற்றலை விளைவிக்கும் எரிபொருள் மூலம்’ என்று எண்ணுதல் வேண்டா. நாம் பட்டினி கிடக்கும் பொழுது உடலில் சேமித்து வைக்கப் பெற்றுள்ள கொழுப்புப் பொருளும் பிசிகமும் பயன்படுகின்றன. நம்முடைய உடலில் பிற இடங்களில் உண்டாகும் வீரியப் பொருள்களால் எல்லா உயிரணுக்களினுடைய ஆற்றல் விளே விக்கும் துசைப்புளிய மண்டலங்கள் தூண்டப்பெறுகின்றன. பழச் சருக்க ைசிதைதல் உட்பட, எல்லா வளர்சிதைச் செயல்களையும் புரிசைச் சுரப்பியின் ஹார்மோன் துரிதப் படுத்துகின்றது. புரிசைச் சுரப்பியின் அதிகமான ஹார்மோன் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கின்றது; இதல்ை அடிப்படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/147&oldid=865904" இலிருந்து மீள்விக்கப்பட்டது