பக்கம்:மானிட உடல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் சிதை மாற்றம் l25 ளாக உடைக்கப்பெறுகின்றன. உடல் வளர்ச்சியும் உடல் நலமும் இவற்றுள் சில பொருள்களின் தேவையான அளவு இருப்பதைப் பொறுத்திருக்கின்றன. நமக்குத் தெரிந்தவைக ளாக இருபத்திரண்டு அமினே அமிலங்கள் உள்ளன ; அவற். அறுள் பத்து மிகவும் இன்றியமையாதவைகளாகக் கொள்ளப் பெற்றுள்ளன; உடல்அவற்றின் உற்பத்தி செய்தல் முடியாது; ஆனல், அது அவற்றினேக் கட்டாயம் உட்கொள்ளத்தான் வேண்டும். ஏனேய பன்னிரண்டு அமினே அமிலங்களையும் இன்றியமையாதனவாகவுள்ள பத்து அமிலங்களினின்றும் தோற்றுவித்துக்கொள்ள முடியும்; அல்லது கார்போஹைட்டி ாேட்டுகள் போன்ற வேறு பொருள்களினின்றும் அவற்றினை உண்டாக்கிக் கொள்ளலாம். இந்த அமினுே அமிலங்களாகிய மிக எளிய வேதியற் கூட்டுப் பொருள்களிடமிருந்தே உயி: ானுக்களின் பிசிதங்கள் உண்டாக்கப்பெறுகின்றன. இவ்வாறு உண்டாக்கப்பெறும் செயலைப்பற்றிய செய்தி இன்னும் தெளிவாக அறியப் பெறவில்லை ; உயிரியல் - வேதி யற் புலவர்கள் அதனைத் தொகுப்பு என்று குறிப்பிடுவர். புதிய இழையப் பிசிதமும் குருதிப் பிசிதமும் சதா தொகுப் பித்துக்கொண்டே யிருக்க வேண்டு மென்றும், பழுதுபட்ட அல்லது கெட்டுப்போன இழையங்கள் புதிதாக இடம்பெறு தல் வேண்டும், அல்லது சீர்திருக்கப் பெறுதல் வேண்டும் என்றும், சாதாரணமான நிலையில் பிசித ஹார்மோனும் துாைப் புளியமும் சரியாக இருந்துகொண்டே யிருக்க வேண் டும் என்றும் நமக்குக் தெரியும். அமினே அமிலங்கள் ஆற்றல் உண்டாக்கும் துரைப்புளியங்களாகவும் ஏற்றுக் கொள்ளப் பெறலாம் ; அவற்றுள் சில கொழுப்புப் பொரு ளாகவும் மாற்றப்பெறக் கூடும். பாலூட்டும் உயிரிகளிடம் எங்கும் நிறைந்துள்ள பிசிகப் பொருள்கள் இருக்கின்றன என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருந்தாலும், அவற்றின் தொகுப்பில் பங்குகொள்ளும் திட்டமான நுரைப்புளிய மண்டலங்களைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அண் மையில் அமினே அமிலங்களுடன் இணைக்கம்பெற்றுள்ள கதிர் வீச்சுள்ள ஓரிடத்தானின் கண்டுபிடிப்பிலிருந்து, அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/149&oldid=865908" இலிருந்து மீள்விக்கப்பட்டது