பக்கம்:மானிட உடல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மானிட உடல் பெறுகின்றது. சேமித்து வைக்கப்பெறும் கொழுப்பு கார்போ ஹைட்ரேட்டிலிருந்தும் தொகுப்பு முறையில் உண்டாக்கப் பெறுகின்றது ; ஆற்றல் உண்டாக்குவதில் பயன்படாத கார்போ ஹைட்ரேட்டிலிருந்து இது உண்டாக்கப் பெறு கின்றது. சேமித்து வைக்கப் பெற்ற கொழுப்பு ” என்ருல் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்தவை என்பது பொருளன்று. ஆனல், உடல் கொழுப்பில் கொழுப்பு அமிலங்கள் சகா அகற்றவும் பெறுகின்றன; சதா புதிதாகச் சேர்க்கவும் பெறு கின்றன. உடலிலிருந்து கொழுப்பின் மொத்தக் கழிவு ’ சதா நடைபெற்றுக் கொண்டே யிருக்கின்றது. இவ்வாறு நடைபெறும் மொத்தக் கழிவின் வேகத்தைப்பற்றிச் சிறி தும் புலனுகவில்லை ; ஆனல், பட்டினி கிடக்கும்பொழுது உடனே கொழுப்பு அமிலம் குருதியோட்டத்தினுள் விடு விக்கப் பெறுகின்றது ; உடனே அது அங்கு ஆற்றல் உற்பத் திக்கு உதவுகின்றது. ஆற்றல் உற்பத்திக்காகக் கொழுப்பு அமிலங்கள் எரிதல் பொதுவாக கல்லீரலில் நடப்பதாகக் கருதப்பெறுகின் றது. கொழுப்பு சேமித்து வைக்கப் பெற்றுள்ள இடத்தி லிருந்து கொழுப்பு அமிலங்கள் குருதியோட்டத்தின் வழி யாகக் கல்லீரலுக்குக் கொண்டுவாப் பெறுகின்றன. கல்லீரலி லுள்ள துரைப்புளிய மண்டலங்கள் பெரிய கொழுப்பு அமில அனுத்திரளேகளிலிருந்து சிறிய பகுதிகளாகச் சிதைகின் றன. இந்தச் சிறு பகுதிகளே கார்போ ஹைட்ரேட்டுக்களைத் தாக்கும் அதே நுரைப்புளியங்கள் கையாளுகின்றன. ஆற்றல் பெறுவதற்காகக் கொழுப்பு எரிதல் எப்பொழுதும் கிற லுடன் நடைபெறுவதில்லை. ஆனல் நீரிழிவு நோயாளிக ளிடம் நன்முக நடைபெறுகின்றது. காரணம், அவர்கள் ஆற்றலுக்காக கார்போ ஹைட்டிரேட்டுக்களைப் பயன்படுத்த முடியாது. இந்த நபர்களிடம் கொழுப்பு அமிலங்களின் பகுதிகள் கீட்டோன் பொருள் வடிவங்களாக சிறுநீரில் வெளியேற்றப் பெறுகின்றன. ஸ்டெசோல்கள் என்பவை கொழுப்பு அமிலங்களாகா விடினும் அவை கொழுப்புப் பொருள்களாகவே கருதப்பெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/152&oldid=865915" இலிருந்து மீள்விக்கப்பட்டது