பக்கம்:மானிட உடல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் சிதை மாற்றம் 129 கின்றன ; சரியாகக் கூறினல் அவற்றை லிபிட்கள் என்று வழங்கலாம். கோலெஸ்டொல் போன்ற ஸ்டோால்கள் ஸ்டெராய்டுகள் என வழங்கும் உயிரியல் கூட்டுப் பொரு களின் குழுவின் ஒரு பகுதியைச் சேர்ந்தவை. கோலெஸ்டெ சால் எல்லாப் பிசாணி இழையத்திலும் பல காவாங்களிலும் காணப்படுகின்றது. உணவின் மூலம் உட்கொள்ளப் பெறும் கோலெஸ்டெராலைத் தவிர, மனித உடல் அப் பொருளை எளிய வேதியல் பொருள்களினின்றும் தொகுத்துக்கொள்ளும் திறனேயும் பெற்றிருக்கின்றது. கோலெஸ்டொல்தான் ஸ்டெராய்டு ஹார்மோன்களின் பலவற்றினுடையவும் கல் வீசல் அமிலங்களினுடையவும் மூலமாக இருக்கிறது; ஆகவே, அப்பொருள் உடலெங்கும் பல்வேறு வடிவங்களில் காணப் பெறுகின் றது. நீர், மின்னுற்பகு திரவ வளர்சிதை மாற்றம் முதன் முதலாகக் தோன்றிய உயிர் ஒரு வகையில் ஒற்றை உயிரணு தன்மையதாக இருக்கலாம். அது முன் கேமயிரிய சகாப்தத்திலுள்ள கடல்களில் ஐம்பதினுயிரம் இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வளர்ச்சி பெற்றிருக்கலாம். பல்வேறு உப்புக்களின் அடர்வு, உயிரியத்தின் அளவு, கடல் களின் தட்பவெட்பநிலை ஆகிய அம்சங்கள் அங்க ஒற்றை உயிரணுத் தன்மையுள்ள உயிரிகள் தோன்றி வளர்ச்சி பெறு வதற்கேற்ற செளகர்யமான சூழ்நிலையை உண்டாக்கின. கழிவுப் பொருள்களை அகற்றுவ தென்பது மிகச் சாதாரண மாகச் சுற்றியுள்ள நீரில் வெளியேற்றப்பட வேண்டிய செயலாகும் ; அவை அங்கு கடலில் கரைக்கப்பெற்ற பெருங் காயம் போலாகிவிடும். தாம் வாழும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளே அனுசரியாமல் பிராணியுலக உயிரிகள் வாழும் திறனின் படிப்படியான வளர்ச்சிதான் கூர்தல் அறச்செயல் ஆகும் என்பது கெளிவாக விளங்குகிறது. பிராணி யுடலினுள் குருதியாகவும் இழையப் பாய்மமாகவும் உள்ள, உயிரணுவின் புறத்தேயுள்ள பாய்மம் என வழங்கப் பெறும் முன்-கேம்பிரியக் கடல் உண்மையில் இணைக்கப்பெறுவதால் இது பெரும்பாலும் முற்றுப் பெறு மா. உ. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/153&oldid=865917" இலிருந்து மீள்விக்கப்பட்டது