பக்கம்:மானிட உடல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மானிட உடல் கின்றது. இன்னும் இந்தப் பாய்மத்தின் செய்கை முன் - கேம்பிரியன் காலத்திலுள்ளதைப் போலவே உள்ளது ; அஃதாவது உயிரணுத் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இயை புள்ள செளகர்யமான உள் சூழ்நிலையை அமைத்துத் தந்து கொண்டே யிருக்கிறது. இழையப் பாய்மம் கண்ணறைகளுக்கிடையே யுள்ள இடங்களில் வைக்கப் பெற்றுள்ளது ; அஃதாவது, குருதிக் குழல்களாலும், நிணநீர்க் குழல்களாலும், நசம்புகளாலும் இணைக்கும் இழையத்தாலும் நிரம்பியுள்ள உயிரணுக்களுக் கும் உயிர் அணுத் தொகிகளுக்கும் இடையேயுள்ள இடங் களில்தான் இது உள்ளது. குருதியிலும் இழையப் பாய்மத் திலும் பல்வேறு உப்புக்களின் அடர்வு ஒரே தன்மைத்தாகவே இருக்கின்றது. உயிரணுவிற்குப் புறத்தேயுள்ள பாய்மம் சிறிதளவு சோடியத்துடனும் கால்சியத்துடனும் சோடியம் குளோரைடையும் சோடியம் பைகார்பனேட்டையும் அதிக மாகப் பெற்றுள்ளது. இந்த இயைபுப் பொருள்கள் நுண் புழைகளிலிருந்து இழையப் பாய்மத்திற்கும் இழையப் பாய் மத்திலிருந்து நுண்புழைகளுக்கும் தாராளமாகச் செல்லக் கூடியவை. எனினும், குருதியிலுள்ள சில பொருள்கள் அவ்வளவு எளிதாகப் பாவுவதில்லை; அவை குருதியில் உண் டான தனிப் பொருள்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதி (நீர்குருதி)ப் பிசிதங்கள் ஆகியவையாகும். இயற்கைக்கு மீறின்' 器 சந்தர்ப்பங்களில் இந்த நேர்த்தி யான ஏற்பாடு தலைகீழாகப் போய்விடும்; பிசிதங்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளையணுக்கள் மாத்திரம் தனித் தனியாகவோ அல்லது ஒன்றுசேர்ந்தோ இழையப் பாய்மத்தினுள் பாவவும் செய்யலாம். அதிக அளவு நீரும் உப்புக்களும் உயிரணுக் களின் உள்ளே வைக்கப் பெற்றுள்ளன. உயிரணுக்களின் உள்ளே இருக்கும் அதிகமான உப்பு சிறிய அளவுகளில் சோடியத்துடன் கலந்த பொட்டாசிய மாகும். உடலிலுள்ள உப்புக்கள் நீரில் கரைந்தவுடன் மின் ஒட்டத்தைக் கடத்தக் கூடியதாக இருப்பதால், அந்த உப்புக்கள் மின்னுற்பகு திர வங்கள் என்று வழங்கப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/154&oldid=865919" இலிருந்து மீள்விக்கப்பட்டது