பக்கம்:மானிட உடல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மானிட உடல் உயிரணுவிற்குப் புறத்தேயுள்ள பாய்மம்தான் இாைப்பை குடல்வழிகளில் உண்டாகும் சுரப்பு நீர்களில் காணப்பெறும் நீர், மின்னுற்பகு திரவங்கள் ஆகியவற்றின் மூலமாக இருக் கின்றது. சாதாரணமாக உடல் நலத்துடன் இருக்கும் ஒரு நபரிடம் பெரும்பான்மையான நீரும் உப்பும் கிரும்பவும் உறிஞ்சப் பெறுகின்றன ; ஆனல், சில நோய்களின் காரண மாக அவை வாந்தியாலும் வயிற்றுப் போக்காலும் இழக்கப் பெறுகின்றன. இத்தகைய இழப்புக்கள் குருதியின் கொள் ளளவுகூட குறையும் அளவிற்கு அதிகமாகி, குருதியையும் அதிக அடர்வாக்கி, அதிர்ச்சியையும் விளைவித்தல் கூடும். வேறுசில நோய்கள் பொட்டாசியம், கால்சியம் போன்ற சில மின்னுற்பகு திரவங்களின் அளவைக் குறைக்கக் கூடியவை, அல்லது அதிகமாக்கக் கூடியவை. இயற்கைக்கு மீறியுள்ள இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், இதயம் மிகவும் பாதிக்கப் பெற்று, திறனுடன் சுருங்க அது முடியாமற் போகின்றது : நிலைமை கடுமையாக இருப்பின் அது முழுதும் நின்று போகவும் கூடும். உயிரணுவிற்குப் புறக்கேயுள்ள பாய்மத்தில் சோடியம் அதிகமாக இருப்பின் கண்ணறை இடைவெளி களில் இயற்கைக்கு மாருக அதிக நீர் இருக்கச் செய்யும் நிலையினை உண்டாக்கி, இழையங்களே நீர் நிறைந்திருக்குமாறு செய்துவிடுகிறது. மருத்துவர் சிறிதளவு குருதியை எடுத்து இந்த வேதியற் பொருள்களின் அளவுகளே நிர்ணயிப்பது நோயாளி பல்வேறு நோய்களால் அவதிப்படும் நிலையினை அறிவதற்கு மிகவும் இன்றியமையாதது. இந்த மருந்துச் சாக்குகள் வளர்சிதை மாற்றச் செய்கைகளில் கொள்ளும் பங்கினே அறிந்துதான் சிகிச்சை மேற்கொள்ளப் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/156&oldid=865922" இலிருந்து மீள்விக்கப்பட்டது