பக்கம்:மானிட உடல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மானிட உடல் என்று வழங்கப் பெறுகின்றன. அவை அட்ரெனேகார்ட்டி கோட்ரோபின், தைரோட்சோபின், மூன்று கோனெடோட் சோபின்கள் ஆகியவை. ட்ரோபிக்' என்ற ஆங்கிலச் சொல் லுக்கு இங்கு ஊட்டந்தரும் என்று பொருள்கொள்ளலாம். அஃதாவது, மே ற்கு றிப்பிட்டவை முறையே மாங்காய் சுரப்பி கள், புரிசைச் சுரப்பி, இனகோளங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான வளர்ச்சி, ஊட்டம், செயற்படும் கிறன் ஆகிய வற்றைக் காக் கூடியவை என்று கொள்ள வேண்டும். இந்த ஹார்மோன்கள் இல்லாமையால்தான் டாக்டர் ஸ்மித்தின் எலி களிடமும் நம்முடைய நோயாளிகளிடமும் மேற்குறிப்பிட்ட உண்மைகளைக் காணநேர்ந்தது. ஊட்டந்தாவல்ல ஹார்மோன் கள் அவ்வுறுப்புக்களைப் பாலிப்பதைத் தவிர வேறு செயல் புரிவதில்லை. வேதியல் முறையில் நோக்கினுல் அவை யாவும் பிசிகங்களே ; ஆகவே, அவை செரிமானச் சாறுகளால் சிதைகல் கூடுமாதலால் அவற்றை வாய்மூலம் உட்கொள்ள லாகாது. வளர்ச்சி தரும் ஆருவது ஹார்மோன்கூட ஒரு பிசி தமே ஆல்ை, அது ஊட்டக் கருவது அன்று. பாலூட்டி களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவுள்ள வளர்ச்சிதரும் ஹார்மோன் உடலிலுள்ள எல்லா உறுப்புக்க ளிடமும் கோடியான செல்வாக்கைப் பெற்றுள்ளது. முதிர் பருவத்திலுள்ளவரிடம் இந்த வளர்ச்சி தரும் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியானல், அக்ரோமி காலி என்ற கோயினே விளைவிக்கும் ; அதனுல் எலும்பு இழையங்களும் மெதுவான இழையங்களும், குறிப்பாக புயங்கள், கால்கள், முகம் ஆகிய இடங்களிலுள்ள இழைய அமைப்புக்கள், பருத்துவிடும். ஒரு குழந்தையிடம் அந்த ஹார்மோன் அதிகப்பட்டால் அது பெரிய உருவத்துடன் காணப்படும் , உடலிலுள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். வளர்ச்சி தரும் ஹார்மோன் எவ்வாறு இவ்விளைவினை உண்டாக்குகிறது என்பதை இன் லும் அறியக்கூடவில்லை.

  • Adrenocortıeotrophin. ÅCTH fTrophic.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/162&oldid=865935" இலிருந்து மீள்விக்கப்பட்டது