பக்கம்:மானிட உடல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோ கிரீன் மண்டலம் 139 உடற்கூறு இயலின் அடிப்படையிலும் செயலின் அடிப் படையிலும் அடித்தலைச் சுரப்பியின் பின் பகுதி அதன் முன் பகுதியினின்றும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றது. டயா பெட்டிஸ் இன்சியிடஸ் ' என்ற நோயினுல் பிடிக்கப்பெற்ற வர்கள், ஏராளமான நீரினே அருந்தி, சிறுரோகக் கழிக்கின்ற னர் ; அவர்களின் தாகவிடாய் தணிக்கப்பெறக் கூடிய தன்று. (இந்த நோயை நீரிழிவு நோயுடன்-அஃதாவது, டயா பெட்டிஸ் மெல்லிடஸ் - வைத்துக் குழப்பம் செய்துகொள்ளக் கூடாது. இந் நோயால் பீடிக்கப்பெற்றவர்களின் சிறுநீரில் சருக்கரை காணப்பெறும்.) டயாபெட்டிஸ் இன்சிபிடஸ் நோயாளிகளின் அடித்தலைச் சுரப்பிகளைச் சோதித்ததில் அவற்றின் பின்பகுதி பல்வேறு அளவுகளில் சிதைந்திருப்பது தென்பட்டது. வேறு சிலரிடம் அடித்தலைப் பின்சுப்பியின் அருகிலுள்ள மூளையின் தெளிவான தனிப் பகுதிகள் ஊறு பட்டிருப்பது காணப்பட்டது. இந்த உண்மைகளிலிருந்து இரண்டு முடிவுகள் கொள்ளப்பெற்றன. 1. அடித்தலைப் பின்சுரப்பி உற்பத்தி செய்யும் பொருள், வெளியேற்றப் பெறும் சிறுநீர் அளவினைக் கட்டுப் படுத்துகிறது. 2. மூளையிலுள்ள தெளிவான பகுதிகள் அடித்தலைப் பின் சுரப்பியினுல் சுரக்கப்பெறும் இப்பொருளேக் கட்டுப் படுத்தக் கூடும். இந்தக் கற்பிதக் கொள்கைகள் சோதனையின் மூலம் உறுதிப்படுக்கப் பெற்றுள்ளன. அன்றியும், அடித்தலைப் பின் சுரப்பியிலிருந்து சாாம் ஒன்று தயார் செய்யப் பெற்று அது டயாபெட்டிஸ் இன்சிபிடஸ் நோயினுல் பிடிக்கப்பெற் றுள்ள நோயாளிகளின் உடலில் ஊசிமூலம் குத்திப் புகுத்தப் பெற்றது. அந் நோயின் அறிகுறிகள் உடனே நீங்கின. எலி களின் அடித்தலைப் பின் சுரப்பிகள் நீக்கப் பெற்றன; அல்லது சிதைக்கப் பெற்றன. அவைகளிடம் டயாபெட்டிஸ் இன்சி பிடஸ் தோன்றின. எலிகளின் மூளைகளின் தெளிவான பகுதிகள் ஊறுபடுத்தப் பெற்றன. இதுவும் அந் நோயினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/163&oldid=865937" இலிருந்து மீள்விக்கப்பட்டது