பக்கம்:மானிட உடல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மானிட உடல் லிருந்து மிகச் சாதாரணமான பொருள்களே ஏற்றுக் கொண்டு மிகச் சிக்கலான ஸ்டெராய்டு ஹார்மோனே உற்பத்தி செய்ய வல்லது என்பதை நாம் அறிவோம். மாங்காய்ச் சுரப்பியின் நடுப் பகுதியாகிய அகணி ஒன்ருேடொன்று நெருங்கிய உறவுகொண்டுள்ள இரண்டு பொருள்களே உற்பத்தி செய்கின்றன. அவற்றுள் நாம் நன்முக அறிந்தது எடைன்பிரைன் (அட்சனலின்) என்பது. அதிக முக்கியமானதாக இராவிடினும் இரண்டாவக்ாகவுள்ள நோர்ப்பைன் பிரைன் என்ற பொருளும் முக்கியமானது தான். மாங்காய்ச் சுரப்பியின் அகணி இந்த ஹார்மோன்களைச் சுரப்பதை அடித்தலைச் சுரப்பி கட்டுப்படுத்தவில்லை. ஆனல், நாம்பு மண்டலத்தான் கோப்பைன்பிசைனும் எபைன் பிரைனும் விடுவிக்கப் பெறுவதை நேரடியாகக் கட்டுப்படுத்து சின்றது. எபைன் பிாைன் இதயம் வேகமாகவும் பலமாகவும் அடித்துக்கொள்வதற்குக் காரணமாகவுள்ளது. அன்றியும், அது கல்லீரலிலிருந்து சருக்கரையையும் வெளிப்படுத்திக் குருதியோட்டத்தினுள் தள்ளி அச் சருக்கரையை ஆற் றலாகப் பயன்படுத்தவும் துணைசெய்கின்றது. இகயத்தைப் பாதிக்காமலேயே நோர்ப்பைன் பிரைன் குருதி யமுகத்தைக் கணிசமான அளவுக்கு உயர்த்துகின்றது. அகணியைத் துாண்டிவிடும் காம்புமண்டலத் துடிப்புக்களும் இடுக்கண்களைத் கரும் தூண்டல்களிலிருந்தே எழுகின்றன ; பின்னவைதாம் மாங்காய்ச் சுரப்பியின் புறணியையும் பாதிக்கின்றன. பல ஆண்டுகட்கு முன்னர் டாக்டர் கேனன். என்பார் மாங்காய்ச் சாப்பியின் அகணியிலிருந்து தோன்றும் ஹார்மோன்கள் தாம் உடலை " வெருண்டோடுதலுக்கு அல்லது வெகுண் டெழுதலுக்கு ’ ஆயத்தப்படுத்துகின்றன என்று விளக்கங் தந்தார். மருத்துவ நூல்களில் இந்த ஆயத்தச் செயல் & 4 வெகுட்சிக் துலங்கல் ’’ என்று வழங்கப் பெறுகின்றது. இந்த நிகழ்ச்சி மிகவும் சிக்கலானது : நாம்பு மண்டலம் முழு வதற்கும் உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் இடையே யுள்ள பாஸ்பர தாக்குதலும் அதில் உட்படுகின்றது. மாங் காய்ச் சுரப்பியின் அகணியினின்று வெளியேற்றப் பெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/168&oldid=865947" இலிருந்து மீள்விக்கப்பட்டது