பக்கம்:மானிட உடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மானிட உடல் துாைப்புளியங்கள். இந்த துாைப்புளியங்கள் முன் சிறுகுடல் வழியாகச் செல்லும் உணவினத் தாக்கி, உட்கொள்ளப் பெற்ற பிசிதங்களையும் கார்போஹைட்டிரேட்டுகளேயும் அவை உறிஞ்சப் பெறுவதற் கேற்றவாறு மாற்றிப் பக்குவப் படுத்துகின்றன. திரைப்புளியங்களேச் சுரக்கும் உயிரணுக் களுக்கோ அல்லது தாம்பமைப்பினுக்கோ தீங்கு நேரிடின் இாைப்பை - சிறுகுடல் தொங்காவுகளையும் ஊட்டம்பற்றிய தொல்லைகளேயும் விளைவிக்கும். துரைப் புளியங்களைச் சுரக்கும் உயிரணுக்களுக்கிடையே இழையத் தீவுகள் பரவியிருக்கின்றன ; அவை தம் அருகி லுள்ள அயலவர்களின் அமைப்பிலும் செயலிலும் வேறு படுகின்றன. இந்த உயிரணுக்கள் (பக்கம் - 90 ; படம் 82) அவற்றைக் கண்டறிந்தவர் பெயரைக்கொண்டு லாங்கர் ஹன்ஸ் தீவுகள் என்று வழங்கப்பெறுகின்றன. இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் அறிவியலறிஞர்கள் நாய்களின் கணையங்களை நீக்கி அவ்வாறு செய்யப்பெற்ற பிராணிகளிடம் நீரிழிவு நோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை உற்று நோக்கினர். எனினும், பிரதமக் கணையத் தும்பினே அடைக் து விடுவதால் மட்டிலும் நீரிழிவு நோய் உண்டாதல் இல்லை. இந்த முறையினல் லாங்கர் ஹன்ஸ் தீவுகளும். ஊறு அடை வதில்லை. லாங்கர் ஹன்ஸ் தீவுகள் கிட்டத்தட்ட ஒர் எண் டோகிரீன் உறுப்பினைப் போலவே செயற்படுவனவாகக் காணப்பெற்றன. இத்தீவிலுள்ள உயிரணுக்களிலிருந்து சாரத்தை எடுத்து அதன் ஹார்மோன்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் யாவும் மீண்டும் மீண்டும் பயனற்றுப் போயின. இவ்வாறு பயனற்றுப் போனமைக்குக் காணம், நுரைப் புளி யங்களே உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் சுரக்கும் சாறு களால் தீவு-உயிரணுக்கள் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார் மோன் சிதைந்த படுதலே யாகும். இறுதியாக, 1921-ல் கனடாவைச் சேர்ந்த பாண்டிங், பெஸ்டு, காலிப் என்ற மூன்று *லாங்கர்ஹன்ஸ் என்பார் இவற்றை 1869-ல் கண்டறிந்தார் ; அவை இன்சுலினைச் சுரப்பவை. லாங்கர் ஹன்ஸ் தீவுகளுக்குத் தூம்புகள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/170&oldid=865952" இலிருந்து மீள்விக்கப்பட்டது