பக்கம்:மானிட உடல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மானிட உடல் வர். இவற்றுள் முன்னது விந்துவைச் சுரக்கும் சிறு குழல் களில் விசைப்புழுக்கள் பக்குவப்படக் காரணமாகின்றன. இரண்டாவது கோனடோட்ரோபின் லெய்டிக் உயிரணுக் களேத் தூண்டி டெஸ்டோஸ்டெரோனேச் சுரக்கச் செய்கின் றது. ஆண்களிடம் சுரக்கும் இந்த ஹார்மோன் இடையீட் டனுக்களேக் தாண்டும் ஹார்மோன் (இ. அ. தா. ஹா) என்றும், பெண்களிடம் சுரக்கும் ஹார்மோன் லூடினேஸிங் ஹார்மோன் (லூ. ஹா.) என்றும் வழங்கப்பெறுகின்றன. டெஸ்டோஸ்ட்ெரோன் குருதியோட்டத்தில் நுழைந்ததும் ஒரு சிறுவன ஒரு யுவகை ஆக்கும் மாற்றங்க ளெல்லாம் நடைபெறத் தொடங்குகின்றன. டெஸ்டோஸ்டெரோனல் கட்டுப்படுத்தப்பெறும் புராஸ்டேட், ஆண்குறி, விந்துவைச் சுரக்கும் சிறுபைகள், உடல் உர்ோமம் போன்றவை பக்கு வப்படுவதுடன், வேறு உறுப்புக்களும் மனமும் கூடப் பக்கு வப்படுகின்றன. டெஸ்டோஸ்டெரோன் தசை வளர்ச்சி யையும் உடல் எலும்புக்கூட்டின் வளர்ச்சியையும் இயக்குகின் றது. அன்றியும், அது விசைப்புழுக்களின் வளர்ச்சியில் துணைசெய்யும் தேமட்டோஜெனிக் ஹார்மோனையும் பாா மரிக்கின்றது. ஒரு யுவனுடைய வாழ்க்கை முழுவதிலும் இடையிட்டனுக்கள் டெஸ்டோஸ்டெரோனையும், விந்து சுரக்கும் சிறு குழல்கள் விசைச் சாறினையும் சாதாரணமாக ஒரு மாருத நிலையில் சுரக்கின்றன. ஐம்பது அல்லது அறுப தாவது வயது தொடங்கும் சமயத்தில் இச் செயல்கள் குறை யக் தொடங்குகின்றன. இவ்வாறு குறைவது மிக மெது வாகவும் அளந்தறிய முடியாத நிலையிலும் நடைபெறுகின் றது. இதற்கும் பெண்ணின் சூதக ஒய்விற்கும் சிறிதும் ஒப்புமை இல்லை. விசைகளைப்போலவே சூற்பைகளும் இழைய உற்பத்தி யைத் தரும் கருஅணுக்களாலும் ஸ்டெராய்டு ஹார்மோன் கள் சுரக்கும் உயிர் அணுக்களாலும் ஆனவை. பெண்ணின் இனப் பெருக்க மண்டலத்தை முக்கியமாக இயக்குபவை ஹார்மோன்களாக இருப்பினும் அம் மண்டலம் தனி

  • menopause. †gametes.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/174&oldid=865960" இலிருந்து மீள்விக்கப்பட்டது