பக்கம்:மானிட உடல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 153 மோனைச் சேகரித்து வைத்துக்கொள்ள வல்லது; பிற சுரப்பி களிடம் இத்தன்மை இல்லை. பிற சுரப்பிகளைவிட இது எளி தில் நோயினுல் பீடிக்கப்படக் கூடியது. அடித்தலை முன்சுரப்பி தைரோட்சோபின் என்ற சாறி னேச் சுரந்து புரிசைச் சுரப்பியின் செயலை ஒழுங்குபடுத்துகின் றது ; அன்றியும், புரிசைச் சுரப்பி ஹார்மோனே உற்பத்தி செய்து அதனைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. எனினும், அடித்தலை முன்சுரப்பி மூளைக்கும் புரிசைச் சுரப்பிக்கும் ஒரளவு நடுவன்போல் அமைந்திருக்கின்றது. மூளையினுள் தோன்றும் நரம்பின் உள்-துடிப்புகள் புரிசைச் சுரப்பி செயற் படுவதில் பெரிய விளைவுகளை உண்டாக்குகின்றன. புரிசைச் சுரப்பி அளவுக்கு மீறி செயற்படுவதால் மனக்கோளாறு களும் நேரிடுகின்றன என்று சொல்லப்படுகின்றது. ஆல்ை, அடித்தலை முன் சுரப்பி புரிசைச்சுரப்பி சரியாகச் செயற்படுவதற்கு முக்கியமானதாக இருப்பின், அதனுடைய அயோடின் தேவையும் அதைப்போலவே மிகவும் முக்கிய மானதாக இருக்கின்றது. அயோடின் இல்லாது, புரிசைச் சுரப்பி ஆற்றலுள்ள ஹார்மோனே உற்பத்திசெய்ய இயலாது. இந்நிலைகளில் அச்சுரப்பி அயோடின் குறையுள்ளதும் ஆற்ற வில்லாததுமான பொருளே அதிகமான அளவுகளில் உற்பத்தி செய்கின்றது : இப்பொருள் அச்சுரப்பியைப் பருத்து விங் கச் செய்துவிடுகின்றது. முன் கழுத்துக் கழலே எனப் படும் தொண்டைக் கட்டி ஏற்படுவதற்கு இதுதான் மூல காரணமாகும். வேறு விதமான தொண்டைக் கட்டிகளும் உள அவை ஏற்படுவதும் அவற்ருல் உடலுக்கு நேரிடும் விளைவுகளும் முற்றிலும் வேருனவை. ஒருவித தொண்டைக் கட்டி அதிக அளவில் சுறுசுறுப் புத்தன்மையுள்ள ஹார்மோனே உற்பத்தி செய்கின்றது. அள வுக்கு மீறி இவ்வாறு செயற்படும் புரிசைச் சுரப்பியைக் கொண்டுள்ள நோயாளிகள் மிகவும் நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பர் , அவர்கள் உடல் அடிக்கடி வியர்க்கும் , அவர்கள் மிகவும் பலக்குறைவுடையவர்களாகவும் இருப்பர். உடலின் வளர்சிதைமாற்றச் செயல்கள் யாவும் துரிதப்படுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/177&oldid=865966" இலிருந்து மீள்விக்கப்பட்டது