பக்கம்:மானிட உடல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மானிட உடல் பெறும். சாதாாணத் தேவையைக் காட்டிலும் மீறிய அள வில் ஆற்றல் உற்பத்திக்காகச் சருக்கரை உபயோகப்படுத்தப் பெறுவதுடன் பிசிதங்களும் கொழுப்புப் பொருள்களும் சிதைக்கப்பெற்றுச் சருக்கரையாக மாற்றப் பெறும். அதிக மான புரிசை ஹார்மோனுல் மிகவும் தீங்கு பயக்கக் கூடிய விளைவுகளில் ஒன்று இதயத்தைப் பற்றியது. புரிசைச் சசப்பி அளவுக்கு மீறி செயற்படுபவர்களிடம் இயல்புக்கு மீறிய இதயத் துடிப்பும் மாரடைப்பும் அடிக்கடி நிகழும் செயல்களா னறன. புரிசைச் சுரப்பியின் ஹார்மோன் அமைப்பைப்பற்றி இன்னும் நாம் திட்டமாக ஒன்றையும் அறியக்கூடவில்லை. மேற்படி சுரப்பியினின்றும் பிரித்தெடுக்கப் பெறும் தைராக் லைன் எனப்படும் ஒரு பொருள் மிகவும் ஆற்றல் மிக்கது. எனினும், புரிசைச்சுரப்பி நுண்ணிய பொடியாக அாைக்கப் பெற்று உடலில் செலுத்தப்பெற்ருல், அதன் செயல் இன்னும் ஆற்றல் மிக்கதாக இருக்கும். மேலும், புரிசைச்சுரப்பியி னின்றும் தைராக்ஸைனைப் பிரித்தெடுப்ப தென்பது எப் பொழுதும் இயலாத கொன்று ; ஆயினும், அதன் பொடி மிகவும் ஆற்றல் மிக்கது. அண்மையில் அயோடின் சேர்க்கப் பற்ற செயற்கை முறைத் தயாரிப்புக்களால் கிடைக்கும் தைராக்ஸைன் கூட்டுப்பொருள் பரிசோதனை செய்யப்பெற் றது. இத்தகைய பொருள்களின் வீரியம் பொடியின் விரி யத்தைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லை. புளிசைத் துணைச் சுரப்பிகள் புரிசைச்சுரப்பி அளவுக்கு மீறி செயற்படுவதைச் சிகிச்சை செய்வதில் அவ்வுறுப்பை அடியோடு அகற்றப்பெற்ற காலத்தில், நோயாளிகள் ஈர்ப்புவாதம் எனப்படும் ஒரு வித வலிப்பால் பிடிக்கப்பெற்றன்ர். பொடியாக்கப் பெற்ற புரிசைச்சுரப்பியை உடலில் செலுத்துவதல்ை இக்கோளாறு நீங்கவில்லை. ஈர்ப்புவாத நோயாளிகளின் குருதியை ஆய் வகத்தில் கவனத்துடன் பரிசோதித்ததில் அதில் கால்சியம் குறைவாக இருப்பது தெரிந்தது. கவனத்துடன் செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/178&oldid=865968" இலிருந்து மீள்விக்கப்பட்டது