பக்கம்:மானிட உடல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 155 பெற்ற உடற்கூற்று சோதனையும் நுண்ணனுப்பெருக்கிச் சோதனையும் அகற்றப் பெற்ற புரிசைச் சுரப்பியில் புரிசைச் சுரப்பியல்லாத வேறு இழையங்களும் இருப்பதைக் காட்டின. புரிசைச் சுரப்பியின் பின்புறமாக, பக்கத்திற்கு இரண்டாக, நான்கு அலகுகள் இருப்பதாகக் காட்டப்பெற்றன. அவை தாம் துணைப்புரிசைச் சுரப்பிகள் (படம் - 48). படம் 48. பரிசைத் துணைச் சுரப்பிகள் (கறுப்பாகக் காட்டப் பெற்றுள்ள பகுதி) ; புரிசைச் சுரப்பியின் பின்புறத்தில் அவற்றின் இருப் பிடத்தைக் காட்டுகின்றன. 1. புரிசைத் துணைச்சுரப்பிகள். 2. புரிசைச் சுரப்பி (பின்புறத் தோற்றம்.) 8. மூச்சுக் குழல், இந்த நான்கு இழைய அலகுகளும் உண்மையான எண் டோகிரீன் சுரப்பிகள் என்பதாக இன்று அறிகின்ருேம். இந்த நான்கு சுரப்பிகளும் உடலில் கால்சியம், பாஸ்வசம் ஆகிய இரண்டின் அளவினையும் உபயோகத்தையும் கட்டுப் படுத்துகின்றன. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்குப் பயன் படுவதைத் தவி. நாம்பு மண்டலம் சரியாகச் செயற்படுவதற் கும் மிகவும் இன்றியமையாததாக வுள்ளது. புரிசைத் துணைச் சுரப்பிகளே அகற்றிவிட்டால், குருதியிலுள்ள கால்சிய கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/179&oldid=865970" இலிருந்து மீள்விக்கப்பட்டது